Posts

Showing posts from December, 2021

அரசியல் சமூகவியல் (Political Sociology)

Image
  அரசியல் சமூகவியல் எனும் பகுதி இன்று முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு துறையாகும்.  அரசியல் சமூகவியல் என்பது அரசியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் படைப்பாகும் சமூக விஞ்ஞான பாடங்களில் அரசியலும்  சமூகவியலும்  இருவேறு தனியான பகுதிகளாகும்.  இருப்பினும்  இரு பகுதிகளிலும் பல்வேறு விடயங்கள் ஒருமித்து காணப்படுகின்றன. ஏனெனில்  சமூகம் என்பது அரசியலிலும் அரசியல் என்பது சமூகத்திலும் நிர்ணயிக்கப்படுகின்ற இருவேறு அம்சங்கள் ஆகும். மேலும் இவ்விரு துறைகளும் மனிதனையும் சமூக அமைப்புகளையும் மையப்படுத்திய ஒன்றாகக் காணப்படுகின்றன. அரசியலுக்கான அடிப்படையான அம்சங்களை வழங்குகின்றது அரசியல் மற்றும் சமூகவியல் ஆகிய இரண்டு சொற்பதங்களின் சேர்க்கையே அரசியல் சமூகவியல் ஆகும். அரசியல் என்பது அரசினைப் பற்றிய ஒரு கற்கை நெறியாக அமைந்திருக்க, சமூகவியல் என்பது சமூகக் கற்கை நெறியாக அமைந்துள்ளது. சமூகவியலும் அரசியலும் நெருங்கிய தொடர்புடையனவாக காணப்பட்டாலும் இவ்விரண்டும் தமது கற்கை தொடர்பான தெளிவான வரையறைகளை கொண்டிருப்பதில்லை.  அரசியல் விஞ்ஞானத்தின் தோற்றத்தினை கிரேக்க கால போலீஸ் அமைப்புடன...

இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சவால்கள்.

Image
இலங்கையில் அரசியல் யாப்புருவாக்கமானது பிரித்தானியர் காலத்தில் 1833 ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பினுடைய படி முறை வளர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. சுதந்திரத்தின் பின் இலங்கையில் பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்புக்கள் இலங்கையின் அரசியல் பொருளாதார, சமூக கட்டமைப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை காலமும் இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் எவையும் முழு இலங்கையர்களையும் திருப்திப்படுத்திய ஒன்றாக அமையவில்லை. இதற்காகவே ஒரு அரசியல் யாப்பு கொண்டு வரும் போது அதற்கெதிராக ஒவ்வொரு சமூகங்களும் எதிர்ப்பை காட்டி வந்தன. சுதந்திரத்தின் பிற்பகுதியில் 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பே நடைமுறையிலிருந்தது. இது இலங்கை மக்களின் இறைமையை பாதித்ததாக காணப்படுகின்றது. இதனால் 1972 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் தலைவர்களால் 1ஆம் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இவ் யாப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டதனால் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு  உருவாக்கப்பட்டது. இவ் அரசியல் யாப்பும் எல்லா சமூகத்தினரையும் திருப்திப்...

அரசியல் கட்சிகளும், அடிப்படை எண்ணக்கருக்களும்

Image
அ ரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. ஒத்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் தோற்றுவிக்கப்படும் அமைப்பு அரசியல் கட்சி எனப்படும். அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு. அர‌சிய‌ல் கட்சி முறை என்றால் என்ன?. அரசியல் வாழ்க்கையில் தங்களுக்குள் சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே கட்சி என்பதாகும். 1.எட்மண்ட் பர்க் என்பவர் "தங்களது கூட்டு முயற்சியால் குறிப்பிட்ட சில கொள்கைகளின் மீது தேசிய ஆர்வத்தை உருவாக்கி ஒத்தகருத்தை ஏற்படுத்தும் மக்கள் கூட்டமைப்பிற்கே அரசியல் கட்சி" என குறிப்பிட்டுள்ளார். 2.ஸ்டீபன் லீகாக் க...

அரசியல் கலாசார எண்ணக்கருவும், இலங்கையில் அதன் பண்பு காணப்படும் விதமும்.

Image
அரசியல்  கலாச்சாரம் என்ற விடயம் புதியதொன்றாக காணப்படுவதுடன் அது தொடர்பான தெளிவான புரிதல்கள் சிக்கலானவை என்றே கூற வேண்டியுள்ளது.  பொதுவாக  ஒரு தேசத்தின் அரசியல் கலாச்சாரம் ஆனது அங்குள்ள மக்களின் அரசியல் நெறிமுறைகள், செயற்பாடுகள், அரசியலமைப்பு பற்றிய அவர்களது கருத்துக்கள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள், மக்களின் பங்குபற்றல்கள் அவர்களது பணிகள், உரிமைகள், கடமைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.  ஒரு சமூகத்தின் நடை, உடை, பாவனை, மொழி, இனம், வழிபாடுகள், நெறிமுறைகள், கோட்பாடுகள், கலை, கல்வி, ஆன்மீக வளர்ச்சி என்பன பொதுவான கலாச்சாரங்கள் ஆகும். ஆனால் அரசியல் கலாச்சாரம் என்பது அரசியல் சிந்தனைகள் செயல்பாடுகள், நடத்தைகள் போன்றவற்றைக் குறித்து நிற்கின்றது.  பெரும்பாலான அறிஞர்கள் அரசியல் கலாச்சாரம் ஆனது ஒரு முறைமை கலாச்சாரம், ஒரு செயன்முறை கலாச்சாரம், ஒரு கொள்கை கலாச்சாரம் என மூன்று  பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது என்கிறார்கள்.  இந்த அரசியல் கலாச்சாரத்தின் இயல்பினை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியும் அந்த வகையில்,...

அரசாங்க முறைகளில் சட்ட- நிறைவேற்று துறை தொடர்பு- ஒப்பீட்டு பார்வை.

Image
ஒரு நாட்டில் சட்டத்துறை மற்றும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையே காணப்படும் தொடர்பின் அடிப்படையிலே அவ் அரசாங்க முறைமைகளை தெளிவுபடுத்த முடியும். அதனை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு நாடுகளின் அரசாங்க முறையை அறியவும் முடியும். அந்த வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, பிரித்தானியா போன்ற நாடுகளின் சட்ட- நிறைவேற்று தொடர்பை பின்வருமாறு நோக்கலாம். அமெரிக்கா அமெரிக்க அரசாங்க முறையில் அரசியல் நிறைவேற்று பகுதியாக ஜனாதிபதியும், கபினட் செயலாளர்களுமே காணப்படும். சட்டத்துறையான காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபை என்பவற்றை கொண்டது. யாப்பு வரைவாளர்கள் வலுவேறாக்க அடிப்படையில் இத்துறைகளை வேறுபட்ட துறையாக உருவாக்கி இருப்பினும், அரசாங்க முறையின் செயற்பாட்டிற்கு தொடர்பையும் உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில் காங்கிரஸின் விசேட கூட்ட தவணைகளை ஜனாதிபதி கூட்டுவதன் மூலமான தொடர்புகள் மூலம் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் காணப்படுகின்றது. மேலும் சட்டவாக்க செயன்முறையில் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் காணப்படுகின்றது. பெரும்பாலும் சட்ட மசோதாவை நிறைவேற்று துறையே முதலாரம்பம் செய்கிறது. எனினும் அதனை நிறைவ...