1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் மக்கள் தீர்ப்பு
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் மக்கள் தீர்ப்பு அறிமுகம்: அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது சனநாயகத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு (referendum) ஒப்பங்கோடல் எனும்போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்புக்களை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என பொருள் கொள்ளப்படுகிறது. அரசியல் நிர்வாகத்தில் பொதுமக்களையும் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தினை ஜெக்குலின் ஜின் ரூசோ 1762ல் முன்வைத்தார். 'தனது பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க செயற்பாடுகளைப் பொது மக்களின் விருப்பத்திற்கமைய செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்தவையாகும" என்பது இவரின் வாதமாகும். 1793ல் பிரான்சிய அரசியலமைப்பில் 'மக்கள் தீர்ப்பு' எனும் அம்சம் முதன் முதலாக இடம்பெறலாயிற்று. இது ஒப்பங்கோடல், மக்கள் வாக்கெடுப்பு, பொதுசன வாக்கெடுப்பு, தேசிய வாக்கெடுப்பு என பல பெயர்களில் அழைக்கப்படும். இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, இலங்கை அ...