1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் மக்கள் தீர்ப்பு
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் மக்கள் தீர்ப்பு
அறிமுகம்:
அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது சனநாயகத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு (referendum) ஒப்பங்கோடல் எனும்போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்புக்களை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என பொருள் கொள்ளப்படுகிறது.
அரசியல் நிர்வாகத்தில் பொதுமக்களையும் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தினை ஜெக்குலின் ஜின் ரூசோ 1762ல் முன்வைத்தார். 'தனது பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க செயற்பாடுகளைப் பொது மக்களின் விருப்பத்திற்கமைய செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்தவையாகும" என்பது இவரின் வாதமாகும். 1793ல் பிரான்சிய அரசியலமைப்பில் 'மக்கள் தீர்ப்பு' எனும் அம்சம் முதன் முதலாக இடம்பெறலாயிற்று. இது ஒப்பங்கோடல், மக்கள் வாக்கெடுப்பு, பொதுசன வாக்கெடுப்பு, தேசிய வாக்கெடுப்பு என பல பெயர்களில் அழைக்கப்படும்.
இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசம்பர் 22, 1982ல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (பாராளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
இலங்கையின் சட்ட ஏற்பாடுகள்தொகு
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் சனநாயத்தன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் தீர்ப்புக்கான சட்டவிதிகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
யாப்பின் 4ம் உறுப்புரை (அ) பந்தி மக்களின் சட்டவாக்க அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சட்டவாக்க அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒரு வழிமுறை மக்கள் தீர்ப்பு என்பது புலப்படுகின்றது.
யாப்பின் 83ம் உறுப்புரை (அ) (ஆ) பந்திகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ள உறுப்புரைகளை மாற்றியமைப்பதாயின் பாராளுமன்றத்தில் முழு அங்கத்தினரதும் (சமுகமளிக்காத அங்கத்தவர் உட்பட) 2/3 பெரும்பான்மை பெற்று அதை மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களும் அனுமதிக்க வேண்டும் எனப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் மக்கள் கருத்துக் கணிப்புமுறை முதலாவதாக இலங்கைக்கு அறிமுகஞ் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 13ஆம் அத்தியாயத்தின் 83ஆம் உறுப்புரைகக்மைய அரசியலமைப்பில்
சில உறுப்புரைகளை திருத்துதல் தொடர்பாக வருகைத்தராத உறுப்பினர்கள் உட்பட
பாராளுமன்றின் மொத்த அங்கதத்வர்களின் 2/3 இற்கான விருப்புக்கு மேலதிகமாக மக்கள்
கருத்து கணிப்பொன்றின மூலம் மக்களின் பெரும்பான்மை அங்கீகாரமும்
அவசியமானதாகும்.
யாப்பில் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 60(2) எனும் உறுப்புரைகள உரியதாகும். இவ்வுறுப்புரைகளில் உள்ளடக்கப்பட்ட விதிமுறைகளுக்கு மேலதிகமாக பின்வரும் சட்டமூலங்களும் கருத்துக் கணிப்பிற்கு முன்வைப்பது கட்டாயமானதாகும்.
அந்த உறுப்புரைகளாவன:
1ம் உறுப்புரை:
இலங்கை சுதந்திரம், தன்னாதிக்கம், இறைமைமிக்க சனநாயக சோசலிசக் குடியரசாகும்.
2ம் உறுப்புரை:
இலங்கை குடியரசு ஓர் ஒற்றையாட்சியாகும்.
3ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடமே உண்டு. அதை மாற்ற முடியாது. (இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கியது.)
6ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசின் தேசியக்கொடி சிங்கக் கொடியாகும். (அரசியலமைப்பின் 2ம் பின்னிணைப்பில் கூறப்பட்டுள்ளது.)
7ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசின் தேசிய கீதம் 'ஸ்ரீலங்கா தாயே..'
8ம்உறுப்புரை
இலங்கைக் குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி 4ம் திகதி
9ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னிடம் அளித்துள்ளது. மற்றைய மதங்களுக்கு அவற்றிற்குரிய இடத்தை வழங்கும் அதேவேளையில் இலங்கைக் குடியரசு பௌத்த சாசனத்திற்கு முன்னிடம் வழங்குவதோடு அதைப் பேணி வளர்த்தலும், பாதுகாத்தலும் அரசின் கடமையாகும்.
10ம் உறுப்புரை
சகல பிரசைகளுக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரசாரம் செய்ய உரிமையுண்டு. (சிந்தனை மதச்சுதந்திரம் என்பவற்றிற்கு உரித்துடையவராயிருத்தல் வேண்டும்.)
11ம் உறுப்புரை
ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.
30(2) உறுப்புரை
குடியரசின் ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கவென மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
62(2) உறுப்புரை
பாராளுமன்றத்தின் 1வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகளுக்கு மேல் அதன் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது.
மேற்குறித்த விடயங்களில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் மக்கள் தீர்ப்புக்கு விடப்படல் வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்:
மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது மக்களின் தீர்ப்பிற்காக குறித்த பிரச்சினையை முன்வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கும் வழிமுறை:
ஜனாதிபதி மக்கள் தீர்ப்பிற்காக சமர்ப்பிக்கும் வழிமுறை (சுருக்கமாக)
1. மக்கள் தீர்ப்பிற்காக அமைச்சரவை சான்றுரை அளித்துள்ள அல்லது.
2. மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஏதேனுமொன்று. இவை பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையின் குறித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்காக ஜனாதிபதி சமர்ப்பிப்பார்.
பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்ட மூலத்தை தனது தற்துணிபின் பேரில் மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கலாம். ஆனாலும், இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தம் அல்லது நீக்கம், மாற்றம் குறித்து சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது.எவ்வாறாயினும் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களுள் 2/3 க்கு மேற்பட்ட வாக்களார்கள் தமது வாக்குகளை அளித்தல் அவசியமாகும்.
இவ்வாறு 2/3 க்கும் குறைவானவர்கள் வாக்களிக்குமிடத்து குறித்த பிரேரணை சார்பாக மொத்த பதிவு செய்யப்பட்டு வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறு அளிக்கப்படாதிருப்பின் குறித்த பிரேரணை மக்களால் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்திற்கமைய, சனாதிபதி அவர்கள் மக்கள் தீர்ப்பொன்றை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிட்டதன் பின்னர், தேர்தலின் திகதியையும் குறிப்பிட்டு மக்கள் தீர்ப்பொன்று நடாத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்தலொன்றை வெளியிடுவதனூடாக இடம்பெறும்.
மக்கள் தீர்ப்பில் தேர்தல் ஆணையாளர்:
சனாதிபதியால் மக்கள் தீர்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின் மக்கள் தீர்ப்பு தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரைச் சார்ந்தது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டவிதிகள், 1981 - 7ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலம் என்பவற்றுக்கு இணங்க இத்தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
'ஆம்' 'இல்லை':
1981 - 7ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்துக்கிணங்க மக்கள் தீர்ப்புக்காக விடப்படும் பிரேரணை வினா வடிவில் முன்வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் வாக்காளர் அப்பிரேரணைக்கு விருப்பமாயின் 'ஆம்' எனவும் விருப்பமில்லையெனில் 'இல்லை' எனவும் வாக்கினை வழங்குதல் வேண்டும்.
வாக்குச் சீட்டில் 'ஆம்' 'இல்லை' என்ற சொற்கள் மும்மொழியிலும் அச்சிடப்பட்டிருக்கும். 'ஆம்' என்ற சொல்லுடன் 'விளக்கு' அடையாளமும் 'இல்லை' என்ற சொல்லுடன் 'குடம்' என்ற அடையாளமும் அச்சிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
முதலாவது மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசெம்பர் 22, 1982 இல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (பாராளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
வாக்கெடுப்புத் திகதி: 1982 டிசம்பர் 22 (1982, நவம்பர் 14, வர்த்தமானி 219/2)
பிரேரணை: “முதலாவது பாராளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, 1989 ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை தொடர வேண்டுமென்பதுடன் அதன்பின்னர் அது கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் ஏற்பாட்டை ஏனையவற்றிற்கு மாத்திரம் கொண்டிருக்கின்ற 1982 நவம்பர் 13 ஆம் திகதிய 218/23 ஆம் இலக்க விஷேட வர்த்தமானியில் பிரசுரமான ‘அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தம்’ எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?" என வினா வழங்கப்பட்டது. இதில், விளக்கு வெற்றி பெற்றது.
இதன்படி நாடாளுமன்றத்தின் (பாராளுமன்றம்) பதவிக்காலம் மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
இரண்டாவதுமக்கள் கருத்தறி வாக்கெடுப்பு
வாக்கெடுப்புத் திகதி: 2001 ஆகஸ்ட் 21 (2001 ஜூலை 10, வர்த்தமானி 1192/16)
பிரேரணை: “தேசிய முக்கியத்துவமும் அவசியமும் வாய்ந்த புதிய அரசியல் அமைப்பொன்று நாட்டிற்குத் தேவையா?"
வாக்கெடுப்புத் திகதி (2001 ஒற்றோபர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (2001-08-07 ஆம் திகதிய 1196/18 ஆம் இலக்க வர்த்தமானி)
2001.08.07 ஆம் திகதிய 1196/18 ஆம் இலக்க வர்த்தமானியிலிருந்து வேறுபடுவதால் 2001-07-10 ஆம் திகதிய 1192/16 ஆம் இலக்க வர்த்தமானியில் அச்சிடப்பட்ட பிரகடனத்தை 1199/30 ஆம் வர்த்தமானி மூலம் 2001.09.02 ஆம் திகதியன்று மீளப்பெறுதல்.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.இற்கும் இடையில் கொழும்பில் இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இதன் அடிப்படையில் முதலில் வட கிழக்கிற்கு வெளியேயும் பின்னர் வட கிழக்கிலும் தேர்தல்கள் இடம்பெற்றன. இதன்படி இலங்கை 8 மாகாணங்களாகவும், வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணங்களாக செயற்படும் என்றும் இணைந்த வடகிழக்கில் கிழக்கில் இடம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அது நிரந்தரமாக இணைவதா? அல்லது பிரிவதா? என்றும் தீர்மானிக்கப்படும் என்று ஒப்பந்தம் கூறியது.
பிற்குறிப்பு:
“மக்கள் தீர்ப்பு” முறை பற்றிய சிந்தனையைக் முதன் முதலில் 1762இல் கொண்டு வந்தவர் பிரெஞ்சு சிந்தனையாளரான ரூசோ. அது பிரான்சின் அரசியலமைப்பில் 1793 இல் சேர்க்கப்பட்டது. 1776 அமெரிக்க சுதந்திர சாசனத்திலும் இந்த முறைமை சேர்க்கப்பட்டது. மேலோட்டமாக இது ஜனநாயகத்தின் நல்ல அம்சமாகத் தோன்றினாலும் கூட மறுபுறம் உலகில் பல தலைவர்கள் தமது குருக்குவழிக்குப் பயன்படுத்தவே செய்திருக்கிறார்கள். 1802இல் நெப்போலியன் போனபெர்ட் ஆயுள்முழுவதும் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது கூட இந்த மக்கள் தீர்ப்பின் மூலம் தான் என்பதையும் இங்கு குறித்தாக வேண்டும்.
1991 இல் பங்களாதேஸ் ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் முறையைக் கொண்டு வந்தது, 1991இல் வட அயர்லாந்து சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது போன்றவை கூட சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தான் நிகழ்ந்தது. கடந்த வாரம் ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிவதற்கான தீர்ப்பையும் மக்கள் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தான் எடுத்திருக்கிறார்கள். நீண்ட கால குர்திஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டம் ஜனநாயக வழியில் அம்மக்களின் கருத்தை அறிந்தது இந்த முறைமையால் தான். ஆனால் இலங்கையின் வரலாற்றில் ஒரேயொரு முறை மட்டுமே நிகழ்ந்த இந்தத் தீர்ப்பு ஜே,ஆரின் குறுக்குவழி ஆட்சிக்கே வித்திட்டது.
தொகுப்பு:
S. Vithurshan,
Special in political science,
University of Peradeniya.






Comments
Post a Comment