Posts

2024 பாராளுமன்ற தேர்தலின் எதிர்பார்கை கணிப்புகளும், முடிவுகளும்: விசேட ஆய்வு மட்டக்களப்பு மாவட்டம்

Image
2024 பாராளுமன்ற தேர்தலின் எதிர்பார்கை கணிப்புகளும், முடிவுகளும்: விசேட ஆய்வு மட்டக்களப்பு மாவட்டம் (2024 Parliamentary Election Predictions and Results: A case study of Batticaloa District)  இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தலில் ஒன்றாக பாராளுமன்ற தேர்தல் காணப்படுகிறது. இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 5 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் 5 ஆசனங்களுக்காக 33 சுயேட்சை குழுக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் போராட்டம் முன்னணி, ஜனசத்த பெரமுனை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 23 கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 22 கட்சிகள...

இலங்கையில் இளைஞர் அரசியல்: அடிப்படைப் பின்னணி மற்றும் தாக்கங்கள் : விவரணப் பகுப்பாய்வு. (Youth Politics in Sri Lanka: Background and Implications: A Narrative Analysis)

Image
அறிமுகம்   இலங்கைச் சூழலில் இளைஞர்கள் என்ற வரையறை சற்று தெளிவற்றதாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இளைஞர்களாக வரையறுக்கப்படுகிறார்கள். மேலும் உலக சுகாதார அமைப்பு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை இளைஞர்கள் மற்றும் 10-19 வயதுக்குட்பட்டவர்களை இளம் பருவத்தினராக அங்கீகரிக்கிறது.  இ லங்கையின் மக்கள்தொகை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 15 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இளைஞர் சனத்தொகை என வரையறுக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களுக்கான இந்த 15 முதல் 29 என்ற வரையறையை ஏற்றுக் கொண்டுள்ளது.  இலங்கை போன்ற வளரும் நாடுகளின் மக்கள்தொகை அமைப்பைக் கருத்தில் கொண்டு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பேணுவதில் இளைஞர்கள் உறுதியான பங்கை வகிக்கின்றனர். உதாரணமாக இளைஞர் பாராளுமன்றம் ஊடாக பேணுகின்றனர். இலங்கையின் இளைஞர் சனத்தொகையின் வீதம் தற்சமயம் வீழ்ச்சியடைந்து வருகின்ற போக்கு காணப்படுகிறது. காரணம் அதிகமான தற்கொலை, காணாமல் போதல், போதை பாவனை என்பனவாகும். 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்ப...

கூட்டணி அரசியலும், இலங்கையின் அனுபவங்களும்.

Image
கூட்டணி அரசியலும், இலங்கையின் அனுபவங்களும். (Coalition Politics and the experience of Sri Lanka)  அறிமுகம்(Introduction)  கூட்டணி அரசியல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, ஏதேனும் ஒரு கட்சியின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், அரசாங்கத்தை நடத்தவும் ஒரு அரசாங்கத்தை அமைத்து மேற்கொள்ளும் அரசியலாகும்.  கூட்டணி அரசாங்கங்கள் பொதுவாக ஜனநாயக நாடுகளில் உருவாக்கப்படுகின்றன, அங்கு ஒரு கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தெளிவான பெரும்பான்மையை அடைய முடியாததாக காணப்படும். அந்த கட்சி மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து, ஆட்சி அமைக்க விரும்பும் போது, ​​மொத்த இடங்களின் பெரும்பான்மையை மாற்றும் போது, ​​கட்சிகளின் இந்த ஒன்றியம் கூட்டணி என்று அழைக்கப்படுகிறது. கூட்டணி என்றால் என்ன? (What is the meaning of the Coalition)  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் அல்லது கட்சிகளின் 'இணைவு' என்று பொருள்படும். ' Coalesce ' என்பதிலிருந்து கூட்டணி என்ற வார்த்தை உருவானது. 18 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் எழுச்சி ஏற்பட்டபோது இந்த சொல் அரசியலில் பிரபலமாகியது. இ...

அரசியல் சமூகவியல் (Political Sociology)

Image
  அரசியல் சமூகவியல் எனும் பகுதி இன்று முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு துறையாகும்.  அரசியல் சமூகவியல் என்பது அரசியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் படைப்பாகும் சமூக விஞ்ஞான பாடங்களில் அரசியலும்  சமூகவியலும்  இருவேறு தனியான பகுதிகளாகும்.  இருப்பினும்  இரு பகுதிகளிலும் பல்வேறு விடயங்கள் ஒருமித்து காணப்படுகின்றன. ஏனெனில்  சமூகம் என்பது அரசியலிலும் அரசியல் என்பது சமூகத்திலும் நிர்ணயிக்கப்படுகின்ற இருவேறு அம்சங்கள் ஆகும். மேலும் இவ்விரு துறைகளும் மனிதனையும் சமூக அமைப்புகளையும் மையப்படுத்திய ஒன்றாகக் காணப்படுகின்றன. அரசியலுக்கான அடிப்படையான அம்சங்களை வழங்குகின்றது அரசியல் மற்றும் சமூகவியல் ஆகிய இரண்டு சொற்பதங்களின் சேர்க்கையே அரசியல் சமூகவியல் ஆகும். அரசியல் என்பது அரசினைப் பற்றிய ஒரு கற்கை நெறியாக அமைந்திருக்க, சமூகவியல் என்பது சமூகக் கற்கை நெறியாக அமைந்துள்ளது. சமூகவியலும் அரசியலும் நெருங்கிய தொடர்புடையனவாக காணப்பட்டாலும் இவ்விரண்டும் தமது கற்கை தொடர்பான தெளிவான வரையறைகளை கொண்டிருப்பதில்லை.  அரசியல் விஞ்ஞானத்தின் தோற்றத்தினை கிரேக்க கால போலீஸ் அமைப்புடன...

இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சவால்கள்.

Image
இலங்கையில் அரசியல் யாப்புருவாக்கமானது பிரித்தானியர் காலத்தில் 1833 ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பினுடைய படி முறை வளர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. சுதந்திரத்தின் பின் இலங்கையில் பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்புக்கள் இலங்கையின் அரசியல் பொருளாதார, சமூக கட்டமைப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை காலமும் இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் எவையும் முழு இலங்கையர்களையும் திருப்திப்படுத்திய ஒன்றாக அமையவில்லை. இதற்காகவே ஒரு அரசியல் யாப்பு கொண்டு வரும் போது அதற்கெதிராக ஒவ்வொரு சமூகங்களும் எதிர்ப்பை காட்டி வந்தன. சுதந்திரத்தின் பிற்பகுதியில் 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பே நடைமுறையிலிருந்தது. இது இலங்கை மக்களின் இறைமையை பாதித்ததாக காணப்படுகின்றது. இதனால் 1972 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் தலைவர்களால் 1ஆம் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இவ் யாப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டதனால் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு  உருவாக்கப்பட்டது. இவ் அரசியல் யாப்பும் எல்லா சமூகத்தினரையும் திருப்திப்...