Posts

Showing posts from November, 2021

சர்வஜன வாக்குரிமை

Image
சர்வசனவாக்குரிமை டொனமூர் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட  முக்கியமான ஒரு சிபாரிசாகும்.இ தன்படி 21 வயதை அடைந்த இலங்கை மக்கள் அனைவருக்கும்  வாக்குரிமை  வ ழங்கப்பட்டது. குறிப்பாக ஆண், பெண் அனைவருக்கும் இனம், மதம், மொழி வேறுபாடின்றி  வாக்குரிமை வழங்கப்பட்டது. சர்வசன வாக்குரிமை பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் இலங்கைக்கே முதன்முதலில் வழங்கப்பட்டது. சர்வசன வாக்குரிமை வழங்குவதனை பல அரசியல் தலைவர்கள் எதிர்த்த போதும் கூட டொனமூர் குழு அனைவருக்கும் வழங்கியது ஒரு சிறப்பான செயலாகும். இவ் விதப்புரைக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் கல்வித் தகைமையை அடிப்படையாகக் கொண்டு கற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் வாக்குரிமை முறை தவறானது. மக்கள் அனைவரும் பொறுப்புணர்சியுடன் ஆட்சியில் பங்கெடுப்பதன் மூலம் அவர்கள் மத்தியில் அரசியல் அறிவும் அக்கறையும் வளர்ச்சியடையும். வறுமை நிலையில் பின்தங்கியிருக்கும் மக்கள் குழுவை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தல். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான சமமற்ற அபிவிருத்திகளை இல்லாது ஒழித்தல். அதாவது இலங்கையில் பொது நிர...

சோல்பரி அரசியல் யாப்பின் வெஸ்மின்ஸ்டர் மாதிரி மற்றும் பிரித்தானிய மாதிரிக்கும் இடையிலான வேறுபாடுகள்.

Image
1947ம் ஆண்டு யாப்பு பிரித்தானிய பாராளுமன்ற முறைமையில் இருந்து வேறுபட்டதாகும். அது பல ஒத்த தன்மைகளை கொண்டு காணப்படுகின்றது. எனினும் நுணுக்கமான ஆராயும் போது அது மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. இவற்றை பின்வரும் இயல்புகளின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்க முடியும். அவை பின்வருமாறு, பிரித்தானிய அரசியலமைப்பின் பிரதான இயல்பு அதன் பெரும்பகுதி எழுதப்படாது இருப்பதாகும்.  இதன்படி பிரித்தானியா அரசியல் திட்டம் என அழைக்கத்தக்க ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் திட்ட ஆவணமொன்றினை அங்கு அடையாளம் காண முடியாது. இதனையே டீ. டொக்குவில் என்ற அறிஞர் உண்மையில் இங்கிலாந்து அரசியல் திட்டம் என்ற ஒன்று இல்லை என்று குறிப்பிடுகிறார்.  இவ்வாறு பிரித்தானியா எழுதப்படாத அரசியலமைப்பினை கொண்டிருப்பதற்கு அரசியலமைப்பு நடைமுறைகளில் மரபுகளினதும் வழக்காறுகளினதும் அதிகரித்த செல்வாக்கே  பிரதான காரணமாகும்.  ஆனால் இலங்கையில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல ்பரி அரசியலமைப்பு முற்றிலும் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும். இதில் எந்த ஒரு மரபுகளையும், வழக்காறுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவில்லை. பிரித்தானியா...

பொதுநலவாய அமைப்பு(Common wealth countries)

Image
பொதுநலவாய அமைப்பு என்பது பிருத்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழுருந்து பின்னர் சுதந்திரம் அடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். சூரியன் ஆஸ்தமிக்காத நாடு என புகழ் பெற்ற பிருத்தானியாவின் ஆளுகையின் கீழ் 1945 வரை பல ஆசிய ஆபிரிக்க ஐரோப்பிய நாடுகள் இருந்தன.  இரண்டாம் உலகப்போரில் பலவீனமுற்றதன் விளைவாக தனது ஏகாதிபத்திய கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தி பல நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது. இத்தகைய சுதந்திரம் பெற்ற நாடுகள் பிருத்தானியாவுடன் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பினை உருவாக்கின.  எனிலும் பிரித்தானியாவுடன் வரலாற்று ரீதியான உறவுகள் இல்லாத போதும் ருவண்டா, மொசாம்பிக் ஆகிய நாடுகள் பின்னர் இதில் இணைந்து கொண்டன.  இன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் போன்று செயற்படும் இக் கூட்டமைவு காலனிய ஒடுக்குமுறையின் காலம் கடந்தும் வாழும் குறியீடாகும்.  இது ஆரம்பிக்கப்பட்ட போது 8 நாடுகள் அங்கத்துவத்தினை பெற்றிருந்தன. மேற்கூறியவாறு தற்போது இதில் 54 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் இதில் 19 ஆபிரிக்க நாடுகளும், 11 தென் பசுவிக் நாடுகளும், 10 கரீபியன் நாடுகளும், 8 ஆசிய நாடுகளும், 3 அமெரிக்க...