Posts

Showing posts from November, 2020

யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).

Image
  யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).  இலங்கை ஆரம்ப காலத்திலிருந்து சீனாவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. இதனால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே இன்றுவரை நெருக்கமான உறவு இடம்பெற்று வருவதைக் காணலாம். அந்த வகையில்  ஆரம்ப காலத்தில் இலங்கை - சீனாவுக்கு இடையே உறவுகள் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும். 1948-1956 காலப்பகுதி சுதந்திரத்தினை அடுத்து எட்டு வருடங்களாக இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேலைத்தேய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இக்காலப்பகுதியில் பிரதமர்களாக இருந்த சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவ ஆகியோர் இந்த கொள்கையினை பின்பற்றினர். கம்யூனிசத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தல், புதிதாக இலங்கையில் உருவாக்கிய பாராளுமன்ற  ஸ்தாபனங்களை கம்யூனிச அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் என்ற அம்சங்களே  ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டு கொள்கையை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகித்தது.  கம்யூனிஸ்டுகளுடனோ, கம்யூனிச நாடுகளுடனோ எத்தகைய தொடர்புகளையும் கொள்ள மறுப்பதே அக்காலகட்டத்தில் ஐக்கிய தேசி...