அரசாங்க முறைகளில் சட்ட- நிறைவேற்று துறை தொடர்பு- ஒப்பீட்டு பார்வை.

ஒரு நாட்டில் சட்டத்துறை மற்றும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையே காணப்படும் தொடர்பின் அடிப்படையிலே அவ் அரசாங்க முறைமைகளை தெளிவுபடுத்த முடியும். அதனை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு நாடுகளின் அரசாங்க முறையை அறியவும் முடியும். அந்த வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, பிரித்தானியா போன்ற நாடுகளின் சட்ட- நிறைவேற்று தொடர்பை பின்வருமாறு நோக்கலாம்.

அமெரிக்கா

அமெரிக்க அரசாங்க முறையில் அரசியல் நிறைவேற்று பகுதியாக ஜனாதிபதியும், கபினட் செயலாளர்களுமே காணப்படும். சட்டத்துறையான காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபை என்பவற்றை கொண்டது. யாப்பு வரைவாளர்கள் வலுவேறாக்க அடிப்படையில் இத்துறைகளை வேறுபட்ட துறையாக உருவாக்கி இருப்பினும், அரசாங்க முறையின் செயற்பாட்டிற்கு தொடர்பையும் உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில் காங்கிரஸின் விசேட கூட்ட தவணைகளை ஜனாதிபதி கூட்டுவதன் மூலமான தொடர்புகள் மூலம் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் காணப்படுகின்றது. மேலும் சட்டவாக்க செயன்முறையில் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் காணப்படுகின்றது. பெரும்பாலும் சட்ட மசோதாவை நிறைவேற்று துறையே முதலாரம்பம் செய்கிறது. எனினும் அதனை நிறைவேற்ற காங்கிரஸ் உறுப்பினர்களிலே தங்கியிக்க வேண்டும். அதேபோல் மக்கள் பிரதிநிதிகள் சபை அல்லது செனட்சபை நிறைவேற்றும் சகல மசோதாக்களும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பெற்றாலே சட்டமாகும். எனினும் அதனை அங்கீகரித்தல், தடுத்து வைத்தல், திருப்பி அனுப்ப முடியும்.

மேலும் வரவு செலவு தொடர்பில் தொடர்பு காணப்படுகின்றது. குறிப்பாக உலகில் எந்தவொரு சட்டத்துறையும் பெறாத அளவுக்கு அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்று துறையின் மீது நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை பெற்றுள்ளது. ஜனாதிபதியின் முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகத்தினால் காங்கிரஸில் முன்வைக்கப்படும் மதிப்பீடுகளை குறைக்க முடியும். மாற்ற முடியும். இதன்படி இலாகாக்கள் தொடர்பாக நிறைவேற்றுத்துறை முன்வைக்கும் பொது நிதி பற்றிய வேண்டுகோள் மீது சட்டத்துறை மிகவும் கனமாக இருக்கும். மேலும் நியமன விடயங்களில் தொடர்பு காணப்படுகின்றது. கபினட் செயலாளர்கள், மத்திய அரசாங்கத்தின் நீதியரசர்கள், வெளிநாட்டு தூதுவர் போன்ற நிறைவேற்று துறையினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களை அங்கீகரிக்கும் முக்கிய அதிகாரம் செனட் சபைக்கு காணப்படுகின்றது.

மேலும் போர் மற்றும் சமாதானம் தொடர்பாக தொடர்புகள் காணப்படுகின்றது. ஜனாதிபதி ஆயுதம் தாங்கிய படைகளின் கட்டளையிடும் அதிகாரம் உள்ளது போல, போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் சட்டத்துறைக்கு உண்டு. இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்துறையுடன் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கை ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி ஆயுதம் தாங்கிய படைக்கு கட்டளையிடும் அதிகாரம் உள்ளது.  மேலும் ஜனாதிபதி கைச்சாத்திடும் வெளிநாட்டு ஒப்பந்தங்களை 2/3 பெருமான்மையால் அங்கீகரிக்கும் அதிகாரம் செனட் சபைக்கு உண்டு. மேலும் ஜனாதிபதியை பதவி நீக்கும் குற்றப் பிரேரணை அதிகாரம் காங்கிரஸிற்கு உண்டு. உதாரணமாக 1974இல் ஜனாதிபதி நிக்சன் காங்கிரஸ் அச்சுறுத்தல் மூலம் பலவந்தமாக நீக்கம் செய்யும் அதிகாரம் உண்டு. இதேபோன்று இலங்கையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வந்து பதவி நீக்கலாம். ஆனாலும் கடினமானதாகும். பிரான்ஸிலும் இந்த நிலை காணப்படுகிறது. மேற்குறிப்பிட்டவாறு ஐக்கிய அமெரிக்காவில் சட்ட- நிறைவேற்று துறைக்கு இடையில் தொடர்பு காணப்படுகின்றது.

பிரித்தானியா.

பிரித்தானியா பாராளுமன்ற அரசாங்க முறையை பின்பற்றும் நாடாக உள்ளது. இங்கு நிறைவேற்றுத்துறையாக முடியும், பிரதமர் மற்றும் அமைச்சரவை காணப்படுகின்றது. சட்டமன்றமான பாராளுமன்றம் மக்கள் பிரதிநிதிகள் சபை, பிரபுக்கள் சபை என இரு சபைகளை கொண்டது. இதற்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. ஏனெனில் ஒரே தேர்தலி்லே இரண்டு துறையும் தெரிவாவதால் மிகவும் அண்மையான தொடர்பு காணப்படுகின்றது. நாம நிர்வாகியான முடியானவர் சட்டத்துறையுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் தொடர்பு கொண்டுள்ளார். அதாவது பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் புதிய தேர்தலை நடாத்துவதா? அல்லது கூட்டரசாங்கம் நடாத்துவதா? என தீர்மானிக்கப்பார்.

அடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கம் தோற்கடிக்கும் போது  புதிய தேர்தலை நடாத்துவதா? அல்லது எதிர்கட்சியை ஆட்சியில் அமர்த்துவதா? என்பதை தீர்மானிப்பார். இவ்வாறான தொடர்பு காணப்படுகின்றது. மேலும் சகல சட்டங்களும் முடியினால் பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்றது. முடி சட்டத்துறையின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளார். முடியின் பெயராலே கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல் என்பன காணப்படுகின்றது. இது இலங்கை மற்றும் பிரான்ஸில் ஜனாதிபதி மேற்கொள்வார்கள். மேலும் பாராளுமன்றத்தில் சிம்மாசன பிரசங்க உரையை முடியே மேற்கொள்ளுவார். இலங்கையில் ஜனாதிபதியால் கொள்கை விளக்க உரை நிகழும்.

மேலும் பிரதமர் அரசாங்கத்தின் கொள்கைகளை பாராளுமன்றத்தில் சட்டமாக அறிமுகம் செய்வதிலும், அமுலாக்கம் செய்வதிலும் மந்திரி சபையுடன் செயற்படுவார். மேலும் சட்டத்துறையில் பெரும்பான்மை விருப்பு கொண்டவரையே பிரதமராக முடி தெரிவு செய்கிறார். இதனால் பிரதமருக்கும், பாராளுமன்றத்திற்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது. மேலும் பாராளுமன்றம்சார் நிறைவேற்று துறையை பிரித்தானியா கொண்டுள்ளதால் பாராளுமன்றத்திற்கு நிறைவேற்றுத்துறை பொறுப்புக்கூற வேண்டும். இல்லாவிட்டால் சட்டத்துறையால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவி அகற்றப்படுவர். மேலும் பொதுமக்கள் சபையே நாட்டின் நிறைவேற்று துறையை கொண்டு நடத்துகிறார்கள். இவ்வாறு ஜனாதிபதி மற்றும் அர்த்த நிறைவேற்றுத்துறையை விட பாராளுமன்ற அரசாங்க முறையில் சட்ட- நிறைவேற்றுத்துறை தொடர்பு மிக நெருக்கமானது.

பிரான்ஸ்.

ஓர் அரசாங்க முறையில் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் அம்முறையின் செயற்பாடு தொடர்பாக இரண்டு விதத்தில் முக்கியம் பெறுகிறது. முதலில் அரசாங்கத்தின் செயல்திறன் அத் தொடர்பின் இயல்பின்படி தங்கியிருக்கும். இரண்டாவது அரசாங்க முறையில் நிறைவேற்றுத்துறையின் தன்னிச்சையான செயற்பாடுகளை தவிர்க்க சட்டத்துறைக்கு உள்ள திறன் அத் தொடர்பின் இயல்பின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. இதன்படி பிரான்ஸின் 5 ஆம் குடியரசு யாப்பின் கீழ் நிறைவேற்றுத்துறை கலப்பு முறையாகும். இது ஜனாதிபதி மற்றும் பிரதமரை தலைவராக கொண்ட அமைச்சரவையையும், சட்டத்துறை தேசிய பேரவை, செனட் சபை என இரண்டு சபையை கொண்டதாகும்.

பிரான்ஸிய ஜனாதிபதி மக்களினால் தெரிவு செய்யப்படுவதால் சட்டத்துறைக்கு பொறுப்புக்கூறாதிருக்கும் நிலையை வகிப்பதோடு, சட்டத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டவராகிறார். ஜனாதிபதி சட்டத்துறையினால் கட்டுப்படுத்தப்படுவதற்குள்ள ஒரே வழி அவருக்கு எதிராக முன்வைக்கும் குற்றப்பிரேரணை ஆகும். ஆனால் இது இலங்கையினை போன்று கடினமானதாகும். காரணம் பிரான்ஸில் காணப்படும் பல கட்சி முறைமையே ஆகும். ஜனாதிபதி அமைச்சரவையின் உறுப்பினராயினும், அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து சட்டதுறை பிரதமர், அமைச்சரவையை நீக்கம் செய்யும் போது ஜனாதிபதி பதவி விலகுவதில்லை. இதேபோன்றுதான் இலங்கையிலும் காணப்படுகின்றது. மேலும் சட்டத்துறை தொடர்பாக ஜனாதிபதி பரந்துபட்ட அதிகாரங்களை அனுபவிப்பதோடு அதன் மூலம் சட்டதுறையைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகளவு வாய்ப்பு காணப்படுகின்றது. அந்த வகையில் பதவிக்காலம் முடிய பின்னர் தேசிய பேரவையினை கலைக்க முடிதல், சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், தேசிய பேரவைக்கு செய்தி அனுப்பல், உரை நிகழ்த்தல், சட்டங்களின் யாப்புறு தன்மையை தீர்மானிக்கும் பரீசிலனை செய்ய அரசியலமைப்பு பேரவைக்கு ஆற்றுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இதனால் தொடர்பு உருவாகின்றது.

மேலும் சட்டவாக்கம் செய்யும் அதிகாரம் சட்டத்துறைக்கு மட்டும் அன்றி ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஒப்பங்கோடலை நடாத்தும் அதிகாரம் உண்டு. இது இலங்கையிலும் நடைமுறையில் உள்ளது. மேலும் பிரதமர், ஏனைய அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பார். இலங்கையிலும் இதே நிலைதான் உள்ளது. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லா விட்டாலும் நிறைவேற்று குழுச் செயற்பாடுகளில் பங்குபெற முடியும். அமைச்சரவையானது கூட்டுப் பொறுப்பினை மீறும் போது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அதிகாரம் தேசிய சபைக்கு உண்டு. இதே முறையை பிரித்தானியா, இலங்கை பின்பற்றுகின்றன. மேற்குறிப்பிட்டவாறு பிரான்ஸில் பலம் வாய்ந்த நிறைவேற்றுத்துறையும், பலவீனமான நிறைவேற்றுத்துறையும் உள்ளது. இவ்வாறு இரண்டு துறைக்கும் இடையிலான தொடர்புகளை இலங்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்கையில் இரண்டும் ஒரேமாதிரியானது. 

இலங்கை.

இலங்கையில் ஜனாதிபதி முறைமையையும், பாராளுமன்ற அரசாங்க முறையையும் பிரான்ஸ் போன்று பின்பற்றும் நாடாகும். இலங்கையில் மற்றைய நாடுகளை போன்று சட்டத்துறை- நிறைவேற்றுத்துறைக்கு இடையே தொடர்பு காணப்படுகின்றது. மூல அரசியல் யாப்பின் உறுப்புரை 42படி, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டம் உள்ளிட்ட மேலும் எழுதப்பட்ட சட்டங்கள் என்பவற்றின் கீழ் தாம் நிறைவேற்றும் அதிகாரங்களும் பணிகளும் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும். ஆயினும் அது கடினம். குற்றப்பிரேரணை மூலமே ஜனாதிபதியை பாராளுமன்றத்தினால் பதவி விலக்க முடியும். அது மிகவும் கடினமான ஒரு செயன்முறை ஆகும். இதே நிலை பிரான்ஸில் காணப்படுகின்றது. எனினும் அமெரிக்காவில் ஜனாதிபதியை பதவி நீக்கமுடியும் என்பதை கடந்த கால அனுபவங்களில் அறியலாம்.

ஆனால் அரசியல் அமைப்பின் 19ம்  திருத்தத்தின் படி 33ம் பிரிவு ஜனாதிபதி தமது தத்துவங்களையும் பணிகளையும் கடமைகளையும் உரியமுறையில் நிறைவேற்ற ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பாகுதல் வேண்டும்.  இதனால் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் காணப்படுகின்றது. ஆயினும் 20ஆவது திருத்தத்தின் மூலம் அது இல்லாமல் செய்யப்பட்டது. மேலும் அரசியல் அமைப்பின் 18ம்திருத்தத்தின் படி 32(3)ம் மற்றும் (4)ம் பிரிவு ஜனாதிபதி அவரது பதவியின் காரணமாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு வருகைதருதல் வேண்டும். இது ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தியது.

இதைவிட 19ம் திருத்தத்தின் படி அரசியல் அமைப்புப் பேரவையின் சிபாரிசின் பேரில்
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகிறார். ஜனாதிபதி பாராளுமன்றத்தினைக் கூட்டுவார், கலைப்பார், ஒத்திவைப்பார். இதுபோன்ற நிலை பிரான்ஸிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்கா ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால் பிரித்தானியாவில் முடியே இதனை செய்வார். இதைவிட 20ஆம் சீர்திருத்தத்தின் கீழ் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இரண்டரை வருட காலத்தினுள் பாராளுமன்றம் கேட்டு கொண்டாலே ஒழிய அதனை கலைக்க முடியாது. மூல யாப்பின் கீழ் ஜனாதிபதியால் கொள்கை பிரகடன உரை வாசித்தல் என்பன மூலம் தொடர்பு காணப்படுகின்றது. மேலும் பாராளுமன்றத்தின் சடங்கு முறையான கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், ஜனாதிபதி கபினட் ஊடாகவே
பாராளுமன்றத்துடன் தொடர்பு கொள்கின்றார். கபினட் ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தையும் இணைக்கும் இணைகரமாகும்.

ஜனாதிபதிக்கும் பாராளுமன்றுக்கும் இடைடையிலான இந்தத் தொடர்புகளைப் பார்க்கும்போது நிறைவேற்று அதிகாரத்தினை கபினட் ஊடாகவும் பெரும்பாண்மைப் பலம்
இருப்பின் தமது கட்சியின் ஊடாகவும் தான் விரும்பியவாறு கட்டுப்படுத்தும்
அதிகாரத்தைப் பெற்றுள்ளார். ஆனால் மறுபுறம் ஜனாதிபதியின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதேநிலையானது பிரான்ஸில் காணப்படுகின்றது. மேலும் உறுப்புரை 85(2)சட்டமூலம் ஒன்றை மக்கள் கருத்துக்கணிப்பிற்கு முன்வைக்க அதிகாரம் பெற்றுள்ள ஒரே நபர் சனாதிபதியாவார். 20ஆவது திருத்தத்திலும் இந்த ஏற்பாடு காணப்படுகின்றது. இதன் மூலம் தொடர்பு காணப்படுகின்றது. பிரான்ஸிலும் இம் நடைமுறையே காணப்படுகின்றது. இவ்வாறு இலங்கையில் சட்ட- நிறைவேற்றுத்துறை தொடர்பு காணப்படுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி முறைமையையும், பாராளுமன்ற அரசாங்க முறையையும் பிரான்ஸ் போன்று பின்பற்றும் நாடாகும். இலங்கையில் மற்றைய நாடுகளை போன்று சட்டத்துறை- நிறைவேற்றுத்துறைக்கு இடையே தொடர்பு காணப்படுகின்றது. மூல அரசியல் யாப்பின் உறுப்புரை 42படி, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டம் உள்ளிட்ட மேலும் எழுதப்பட்ட சட்டங்கள் என்பவற்றின் கீழ் தாம் நிறைவேற்றும் அதிகாரங்களும் பணிகளும் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும். ஆயினும் அது கடினம். குற்றப்பிரேரணை மூலமே ஜனாதிபதியை பாராளுமன்றத்தினால் பதவி விலக்க முடியும். அது மிகவும் கடினமான ஒரு செயன்முறை ஆகும். இதே நிலை பிரான்ஸில் காணப்படுகின்றது. எனினும் அமெரிக்காவில் ஜனாதிபதியை பதவி நீக்கமுடியும் என்பதை கடந்த கால அனுபவங்களில் அறியலாம்.

ஆனால் அரசியல் அமைப்பின் 19ம்  திருத்தத்தின் படி 33ம் பிரிவு ஜனாதிபதி தமது தத்துவங்களையும் பணிகளையும் கடமைகளையும் உரியமுறையில் நிறைவேற்ற ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பாகுதல் வேண்டும்.  இதனால் சட்ட- நிறைவேற்று தொடர்புகள் காணப்படுகின்றது. ஆயினும் 20ஆவது திருத்தத்தின் மூலம் அது இல்லாமல் செய்யப்பட்டது. மேலும் அரசியல் அமைப்பின் 18ம்திருத்தத்தின் படி 32(3)ம் மற்றும் (4)ம் பிரிவு ஜனாதிபதி அவரது பதவியின் காரணமாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு வருகைதருதல் வேண்டும். இது ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தியது.

இதைவிட 19ம் திருத்தத்தின் படி அரசியல் அமைப்புப் பேரவையின் சிபாரிசின் பேரில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகிறார். ஜனாதிபதி பாராளுமன்றத்தினைக் கூட்டுவார், கலைப்பார், ஒத்திவைப்பார். இதுபோன்ற நிலை பிரான்ஸிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்கா ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால் பிரித்தானியாவில் முடியே இதனை செய்வார். இதைவிட 20ஆம் சீர்திருத்தத்தின் கீழ் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இரண்டரை வருட காலத்தினுள் பாராளுமன்றம் கேட்டு கொண்டாலே ஒழிய அதனை கலைக்க முடியாது. மூல யாப்பின் கீழ் ஜனாதிபதியால் கொள்கை பிரகடன உரை வாசித்தல் என்பன மூலம் தொடர்பு காணப்படுகின்றது. மேலும் பாராளுமன்றத்தின் சடங்கு முறையான கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், ஜனாதிபதி கபினட் ஊடாகவே
பாராளுமன்றத்துடன் தொடர்பு கொள்கின்றார். கபினட் ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தையும் இணைக்கும் இணைகரமாகும்.

ஜனாதிபதிக்கும் பாராளுமன்றுக்கும் இடைடையிலான இந்தத் தொடர்புகளைப் பார்க்கும்போது நிறைவேற்று அதிகாரத்தினை கபினட் ஊடாகவும் பெரும்பாண்மைப் பலம்
இருப்பின் தமது கட்சியின் ஊடாகவும் தான் விரும்பியவாறு கட்டுப்படுத்தும்
அதிகாரத்தைப் பெற்றுள்ளார். ஆனால் மறுபுறம் ஜனாதிபதியின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதேநிலையானது பிரான்ஸில் காணப்படுகின்றது. மேலும் உறுப்புரை 85(2)சட்டமூலம் ஒன்றை மக்கள் கருத்துக்கணிப்பிற்கு முன்வைக்க அதிகாரம் பெற்றுள்ள ஒரே நபர் சனாதிபதியாவார். 20ஆவது திருத்தத்திலும் இந்த ஏற்பாடு காணப்படுகின்றது. இதன் மூலம் தொடர்பு காணப்படுகின்றது. பிரான்ஸிலும் இம் நடைமுறையே காணப்படுகின்றது. இவ்வாறு இலங்கையில் சட்ட- நிறைவேற்றுத்துறை தொடர்பு காணப்படுகின்றது. 

மேற்குறித்தவாறு சட்டத்துறை மற்றும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இலங்கை போன்ற நாடுகளில் சட்டத்துறை மற்றும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையே தொடர்பு நெருங்கியதாகவும், தூரமானதாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி ஆட்சி முறை நாடுகளில் தூரமானதாகவும், பாராளுமன்ற அரசாங்க முறையில் நெருக்கமான தொடர்பும், கலப்பு நிறைவேற்றுத்துறை அரசாங்க முறையில் இரண்டிற்கும் இடையிலான தொடர்புகளும் காணப்படுகின்றது.

உசாத்துணை நூல்கள் :

சிவராஜா,அ. (1986), "இலங்கையின் அரசியல் திட்டங்கள் (கோல்புறூக் முதல் இரண்டாம் குடியரசு வரை)". 

சிவராஜா,அ. (2006), "அரசறிவியல் மூல தத்துவங்கள்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 

சிவராஜா,அ. (1997)"ஒப்பீட்டு அரசியல்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 

யோதிலிங்கம், சி. அ,(2006), "ஒப்பியல் அரசாங்கம்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

யோதிலிங்கம், சி. அ.‎ (2007), "அரசறிவியல் ஓர் அறிமுகம்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு.  

விஸ்ணு, ஸ்ரீ. (2014), "உலக அரசியலமைப்புகள்" , கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.




தொகுப்பு :

சி. விதுர்ஷன், 

அரசியல் விஞ்ஞானத்துறை, 

பேராதனைப் பல்கலைக்கழகம். 

Comments

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931