Posts

Showing posts from December, 2020

20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும்.

Image
  20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும். இலங்கையின் அரசியலமைப்பின்  20வது திருத்தத்திற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதன் சாதக பாதகத் தன்மைகள் அலசி ஆராயப்பட வேண்டும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒப்பிட்டு ஆராய்வதே சிறந்தது. அப்போதுதான் அதன் மாற்றங்களும், குறைகளையும் சரிவர அறிய முடியும். அந்தவகையில் சீர்திருத்த வரைபின் படி, 01. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 02. பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 03. அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டுள்ளது. 04. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 05. தேசிய பெறுகை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 06. கணக்காய்வூ சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 07. தேசிய பொலிசு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 08. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 09. பாராளுமன்ற பேரவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 11. ஆணைக்குழுக்களி...

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள்

Image
  இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள் அறிமுகம் இன்று முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்களில் ஒன்று வெளிநாட்டுக் கொள்கை ஆகும்.  வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை எனக் கூறப்படுகிறது.  ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது  தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே ஏனைய அரசுகளுடன் ஒரு அரசு வைத்திருக்கக் கூடிய உறவினைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையையும், அதன் நெறியாள்கைகளையும் அரசுகளின் இறைமை, அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றமை, ஒரு அரசிற்கு இருக்கக்கூடிய தேசிய, சர்வதேச சூழ்நிலைகள் என்பவைகள் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையினை நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது தேசிய நலன் ஆகும். தேசிய நலன் என்பது பின்வரும் மூன்று அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி உலக ஒழுங்கமைப்பு வெளி...

வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம்

Image
வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம்  அறிமுகம்.  சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் மற்றைய அரசுகளுடன் உறவினை மேற்கொள்ளும் போது வெளிநாட்டுக் கொள்கை மிகவும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது. இவ் வெளிநாட்டுக் கொள்கை இன்றி எந்தவொரு அரசும் சர்வதேச மட்டத்தில் இயங்க முடியாது. இவ்வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அரசுகள் தாம் எதிர்பார்ப்பவற்றை அரசுகளுக்கு இடையிலான உறவுகளின் ஊடாக அடைந்து கொள்வதற்கே எதிர்பார்க்கின்றது. இதன் போது அரசுகள் கொண்டிருக்கும் நோக்கங்கள் என்பது அரசியல், பொருளாதார, இராணுவ, வர்த்தக, கலாசார அடிப்படையிலானதாக இருக்கலாம்.  சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப் பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுகளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும்  உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் எதிர்பார்ப்பானது நாடுகள் வெள...