சுவிட்சர்லாந்து அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
1. எழுதப்பட்ட அரசியலமைப்பு சுவிற்சலாந்து அரசியலமைப்பு எழுதப்பட்ட நீண்ட அரசியலமைப்பாகும். இது 04 அத்தியாயங்களையும் 196 உறுப்புகளையும் கொண்டதாகும். இதன்படி தற்போதைய அரசியலமைப்பு 1998 டிசம்பர் 18ம் திகதி சமஷ்டி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 1999 ஏப்ரல் 04ம் திகதி மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும். 2. நெகிழா அரசியலமைப்பு சுவிற்சலாந்து அரசியலமைப்பு நெகிழா அரசியலமைப்பாகும். இங்கு அரசியலமைப்பினை திருத்துவது கடினமானதாகும். அரசியலமைப்பினை திருத்துவதற்கு மக்கள் தீர்ப்பு, தொடக்க உரிமை ஆகிய இரு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சுவிற்சலாந்து அரசியலமைப்பின் 139 ஆவது உறுப்புரை அரசியலமைப்பு திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி குறிப்பிடுகின்றது. இதன்படி சுவிற்சலாந்து மக்களில் 100,000 லட்சம் பேர் 18 மாதங்களுக்கு தமது கையொப்பங்களை திரட்டி குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை அல்லது புதிய அரசியலமைப்பு மசோதாவை சட்டமன்றத்திற்கு முன்மொழியலாம். அதனை சட்டமன்றம் மறுக்கமுடியாது என்பதுடன் பெரும்பான்மை மக்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில் திருத்தம...