Posts

Showing posts from September, 2021

மாதிரி மீட்டல் பயிற்சி வினாக்கள் 01.

Image
மாதிரி  மீட்டல் பயிற்சி வினாக்கள் 01 அலகு 10. பிரித்தானியா.  1 தொடக்கம் 4  வரையான வினாக்களுக்கு ஐந்து கூற்றுக்களில் நான்கு சரியானவையாகும். சரியான கூற்றுக்களின் தொகுதியை அடையாளம் காண்க. 1. பிரித்தானிய அதிகார பரவலாக்கம். பிரித்தானியாவில் அதிகார பரவலாக்கம் காரணமாக ஒற்றையாட்சி முறையில் இருந்து விலகி சென்றுள்ளது. பிரித்தானியா மைய அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க அளவை உப அலகுகளுடன் பரவலாக்கம் செய்துள்ளது. பிரித்தானியாவில் சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட கூட்டு சமஷ்டி ஆட்சியே  காணப்படுகின்றது. பிரித்தானியாவில் சமநிலையற்ற அதிகார பங்கீட்டு முறையே காணப்படுகின்றது. அதிகார பரவலாக்கத்தில் சில மாகாண மக்களுக்கு தமது எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2. பிரித்தானிய உண்மை நிர்வாகம். பிரித்தானிய உண்மை நிர்வாகியான பிரதமர் அரசாங்கத்தினதும், கபினட்டினதும் தலைவராவார். பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்படுவார். மந்திரி சபையின் தலைவராக இருப்பதால் முதன்மையானவர்களுள் முக்கியமானவர்களாக க...

சர்வதேச அரசியல் என்றால் என்ன?

Image
அரசியல் என்ற பதம் நலன்கள், மோதல்கள், அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களுடன் தொடர்புபட்டதாகும். அரசியலைச் சர்வதேச அரசியலுடன் தொடர்புபடுத்தும் போது சர்வதேச இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ‘தேசிய நலன்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. இறைமையுடைய அரசுகள் தங்களுடைய தேசிய நலன்களை அடைவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபடுகின்றன. இதற்காக அதிகாரத்தினைப் பொதுவாக அரசுகள் பயன்படுத்துகின்றன. சர்வதேச அரசியல் என்பது இறைமையுடைய அரசுகளுக்கு இடையிலான உறவுகள் உள்தொடர்புகள் என்பவற்றின் வழி ஏற்படுத்தப்படும் நலன்களிற்கான மோதல்களாகும். இன்னொரு வகையில் கூறின் சர்வதேச அரசியல் என்பது இறைமையுடைய அரசுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு நிலைகளைக் குறித்து நிற்கின்றது. அதாவது முழு உலகமோ அல்லது அதன் ஒரு பகுதியோ அல்லது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச சமுதாயங்களோ தமது நட்புறவுகளை அல்லது பகைமை உறவுகளைப் பரஸ்பரம் செயற்படுத்துவதைக் குறித்து நிற்கின்றது. சர்வதேச அரசியல் பற்றிய வரைவிலக்கணங்கள்: தேசங்களுக்கிடையில் இடம்பெறும் அதிகாரத்திற்கான போராட்டமும் அதிகாரப் பிரயோகமும் சர்வ...