மாதிரி மீட்டல் பயிற்சி வினாக்கள் 01.

மாதிரி  மீட்டல் பயிற்சி வினாக்கள் 01

அலகு 10.

பிரித்தானியா. 



1 தொடக்கம் 4  வரையான வினாக்களுக்கு ஐந்து கூற்றுக்களில் நான்கு சரியானவையாகும். சரியான கூற்றுக்களின் தொகுதியை அடையாளம் காண்க.

1. பிரித்தானிய அதிகார பரவலாக்கம்.

பிரித்தானியாவில் அதிகார பரவலாக்கம் காரணமாக ஒற்றையாட்சி முறையில் இருந்து விலகி சென்றுள்ளது.

பிரித்தானியா மைய அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க அளவை உப அலகுகளுடன் பரவலாக்கம் செய்துள்ளது.

பிரித்தானியாவில் சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட கூட்டு சமஷ்டி ஆட்சியே  காணப்படுகின்றது.

பிரித்தானியாவில் சமநிலையற்ற அதிகார பங்கீட்டு முறையே காணப்படுகின்றது.

அதிகார பரவலாக்கத்தில் சில மாகாண மக்களுக்கு தமது எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2. பிரித்தானிய உண்மை நிர்வாகம்.

பிரித்தானிய உண்மை நிர்வாகியான பிரதமர் அரசாங்கத்தினதும், கபினட்டினதும் தலைவராவார்.

பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்படுவார்.

மந்திரி சபையின் தலைவராக இருப்பதால் முதன்மையானவர்களுள் முக்கியமானவர்களாக காணப்படுகின்றார்.

பாராளுமன்றத்தின் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமராக அமைச்சரவையால் நியமிக்கப்படுவார்.

மந்திரி சபையின் கூட்டங்களை கூட்டுதல் பிரதம மந்திரியின் பிரதானமான பொறுப்பு ஆகும்.

3. பிரித்தானிய நாம நிர்வாகம்.

பிரித்தானிய நாம நிர்வாகம் உண்மை நிர்வாகியால் தெரிவு செய்யப்படுகின்றார்.

நாம நிர்வாகி தேசிய சட்டத்துறையின் ஒரு பிரதானமான பகுதியாக காணப்படுகின்றார்.

நாம நிர்வாகியே சட்டங்களுக்கு ஒப்பமிட்டு சட்டமாக்கும் அதிகாரம் கொண்டவர்.

தமது அதிகாரத்தை பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரிலேயே மேற்கொள்வார்.

தேசிய நீதித்துறை முறைமை மற்றும் பொதுநலவாய அரசசார் நிறுவனத்தின் தலைவராக காணப்படுவார்.

4. பிரித்தானிய பாராளுமன்றம்.

இரு மன்றுகளைக் கொண்டுள்ளதுடன், பொதுமக்கள் சபையே இன்று பலம் வாய்ந்ததாக விளங்குகிறது.

சட்டவாக்கத்தில் உயர்தன்மை மிக்கதாக இருப்பதால், எச்சட்டத்தையும் ஆக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.

பொது மக்கள் சபையின் உறுப்பினர்கள் நேரடியாக தேர்தல் மூலமாக 5 வருடத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

பொதுமக்கள் சபை நிரந்தரமானதுடன், இதன் தலைவராக உண்மை நிர்வாகி காணப்படுவார்.

பொதுமக்கள் சபையானது தேசிய நிதிசார் விடயங்களை பேணுவதுடன், பண மசோதாவை ஆரம்பிக்கும் அதிகாரம் கொண்டது

கட்டமைப்பு வினாக்கள்:

1. பிரித்தானிய அரசியலமைப்பில் வலுமிக்க கருத்துக்களும், மூலக்கொள்கைகளும் காணப்படுகின்றது. அவற்றுள் இரண்டினை குறிப்பிடுக.

2. ஸ்காட்லாந்துக்கு அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ள முறைகள் இரண்டினை குறிப்பிடுக.

3. பிரித்தானிய அரசாங்க முறையில் உண்மை நிர்வாக, நாம நிர்வாக பதவிகளை முறையே குறிப்பிடுக.

4. பிரித்தானிய சட்டமன்றம் இரு சபைகளை கொண்டுள்ளது. அவற்றின் பெயர்களையும், அமைவுச் சேர்க்கையையும் முறையே குறிப்பிடுக.

தொகுப்பு

S. Vithurshan, Special in political science,
University of Peradeniya.


Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931