பிரான்ஸிய ஜனாதிபதியின் தெரிவு மற்றும் அதிகாரங்களும் பணிகளும்.

பிரான்ஸ் ஜனாதிபதி வாக்குரிமை பெற்ற பிரான்ஸிய குடிமக்களால் தேர்தல் ஒன்றின் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார். 1962ம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 07 வருடங்கள் என வரையறை செய்யப்பட்டது.

2002 அரசியலமைப்பு
சீர்திருத்தத்தின் பிரகாரம் இவரின் பதவிக்காலம் 05 வருடங்களாக குறைக்கப்பட்டது. 2008ம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் மீண்டும் மீண்டும்
தெரிவு செய்யப்படுவதற்கான கால எல்லை இரண்டு தவணைகளாக வரையறுக்கபட்டுள்ளது.

ஜனாதிபதிக்கெதிரான குற்றப்பிரேரணை பிரான்ஸிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு இது சம்பந்தமான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றம் நிருபிக்கப்பட்டால் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும். அவ்விடத்தினை செனட் சபையின் தலைவர் நிரப்புதல் வேண்டும்.

அதிகாரங்களும் பணிகளும்

1. அரசின் தலைவர் வகையில்,

  • பிரான்ஸிய குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தல்.
  • தேசிய விழாக்களை பங்குபற்றுதல்
  • அரச செய்திகளையும், அறிவித்தல்களையும் வெளியிடல்.
  • கௌரவ பட்டங்களை வெளியிடல்.
  • அரச இலட்சனையை பிரயோகித்தல்.
  • வெளிநாட்டு அரச விருந்தினர்களை வரவேற்றல்.

2. அரசாங்கத்தின் தலைவர் வகையில்,

  • பிரதமரை நியமித்தல்.
  • அமைச்சரவையை நியமித்தல்.
  • அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குதல்.
  • அமைச்சரவையை ஒழுங்குபடுத்தும் கட்டளைகளுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குதல்.
  • பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முக்கிய விடயங்களுக்கு முன் அனுமதி வழங்குதல்.
  • ஜனாதிபதியின் அனுமதியின்றி அமைச்சரவையில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட முடியாது.
  • அமைச்சரவையை மாற்றியமைத்தல்
  • அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குதல்
  • அமைச்சர்மார்களின் பணிகள், பொறுப்புக்களை மாற்றியமைத்தல்.

3. ஆயுதப்படைகளின் தளபதி என்ற வகையில், 

  • ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகளை நியமித்தல். 
  • பதவி உயர்வுகளை வழங்குதல்
  • பதவி நீக்கங்களை மேற்கொள்ளுதல். 
  • போர்ப்பிரகடனங்களை மேற்கொள்ளுதல். 
  • சமாதான உடன்படிக்கைகளை மேற்கொள்ளுதல்.

4. சட்டத்துறை சார்ந்தவை

  • தேசிய சபையை கலைத்தல். (வருடத்தில் 01 தடவை மாத்திரமே சபையை கலைக்க முடியும். கலைப்பதற்கு முன் பிரதமரையும், சட்டத்துறையின் இரு மன்ற தலைவர்களையும் ஆலோசித்தல் வேண்டும் ).
  • பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி உரை நிகழ்த்துதல்.
  • பாராளுமன்றத்திற்கு செய்திகளை அனுப்புதல்.
  • பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களை பிரகடனம் செய்தல்.
  • பாராளுமன்றத்தின் மசோதாக்களை பரிசீலனைக்காக திருப்பியனுப்பும் அதிகாரம்.
  • யாப்புத்திருத்த மசோதாக்களை மக்கள் தீர்ப்பிற்கு விடும் அதிகாரம்.
  • மசோதாக்களை புணராய்வு செய்வதற்காக அரசியல் அமைப்பு குழுவிற்கு அனுப்புதல்.

5. நிறைவேற்றுத்துறை சார்ந்தவை,

  • முழு அரசாங்க சேவையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.
  • பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு சட்டத்தின் மூலம் அரசாங்க சேவையில் மேற்கொள்ள வேண்டிய நியமனங்கள் காணப்படாவிட்டால் அரசாங்க சேவை நியமனங்கள் தொடர்பாக ஜனாதிபதி தமது தற்துணிவு அதிகாரத்தின் அடிப்படையில் செயற்பட முடியும்.

6. நீதித்துறை சார்ந்தவை

  • நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அதிகாரம்.
  • நீதித்துறையின் உயர்மட்ட குழுவினரின் 09 அதிகாரிகளை நியமித்தல்.
  • உயர் நீதிமன்றத்தின் தலைவராக செயற்படல்.
  • குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல்.
  • தண்டணையை குறைத்தல்.

7. வெளிவிவகாரம் சார்ந்தவை

  • உள்நாட்டு வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல்.
  • வெளிநாட்டு கொள்கைகளை கொண்டு நடததுதல்.
  • வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல்.

எனவே தொகுத்து நோக்குமிடத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் அதிகமாகும். முக்கிய அதிகாரம் மற்றும் பொறுப்பு கொண்ட ஒருவராகவும், தற்றுணிவு அதிகாரம் கொண்டவராகவும் உள்ளார்.

தொகுப்பு:
S. Vithurshan 
Special in political science(R)
University of Peradeniya. 

 

Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931