அரசியல் கலாசார எண்ணக்கருவும், இலங்கையில் அதன் பண்பு காணப்படும் விதமும்.

ரசியல் கலாசார எண்ணக்கருவும், இலங்கையில் அதன் பண்பு காணப்படும் விதமும்.

அரசியல் கலாச்சாரம் என்ற விடயம் புதியதொன்றாக காணப்படுவதுடன் அது தொடர்பான தெளிவான புரிதல்கள் சிக்கலானவை என்றே கூற வேண்டியுள்ளது.  பொதுவாக  ஒரு தேசத்தின் அரசியல் கலாச்சாரம் ஆனது அங்குள்ள மக்களின் அரசியல் நெறிமுறைகள், செயற்பாடுகள், அரசியலமைப்பு பற்றிய அவர்களது கருத்துக்கள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள், மக்களின் பங்குபற்றல்கள் அவர்களது பணிகள், உரிமைகள், கடமைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.  ஒரு சமூகத்தின் நடை, உடை, பாவனை, மொழி, இனம், வழிபாடுகள், நெறிமுறைகள், கோட்பாடுகள், கலை, கல்வி, ஆன்மீக வளர்ச்சி என்பன பொதுவான கலாச்சாரங்கள் ஆகும்.

ஆனால் அரசியல் கலாச்சாரம் என்பது அரசியல் சிந்தனைகள் செயல்பாடுகள் நடத்தைகள் போன்றவற்றைக் குறித்து நிற்கின்றது.  பெரும்பாலான அறிஞர்கள் அரசியல் கலாச்சாரம் ஆனது ஒரு முறைமை கலாச்சாரம், ஒரு செயன்முறை கலாச்சாரம், ஒரு கொள்கை கலாச்சாரம் என மூன்று  பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது என்கிறார்கள்.  இந்த அரசியல் கலாச்சாரத்தின் இயல்பினை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியும் அந்த வகையில்,  பொதுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது,  அரசியல் நடத்தை முதன்மைப்படுத்துவது, பங்கிடக்கூடிய விழுமியங்களைக் கொண்ட அரசியல் முறையினை பிரதிபலிப்பது, முறையான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுவது, அரசியல் பயிற்சி வழங்குவது, அரசியல் சமூகமயமாதலை அடியொட்டி காணப்படும்,  உணர்வுபூர்வமான அம்சங்களை கொண்டது, ஒட்டுமொத்த அரசியல் விழுமியங்கள் உள்ளடக்கமாக இருப்பது, அரசியல் கருத்தியலை பிரதிபலிப்பது, வெளிப்படையான தன்மை கொண்டிருப்பது என்பன இவற்றின் பொதுவான பண்பு எனலாம். 

அரசியல் கலாச்சாரம் அனைத்து பொதுவாக தனி மனித கலாச்சாரம், ஒழுக்க ரீதியான அரசியல் கலாச்சாரம், மரபு ரீதியான அரசியல் கலாச்சாரம் என பிரித்துப் பார்க்கப்படுகிறது எனினும் அரசியல் கலாச்சாரம் பற்றிய சிறந்த கருத்தினை முன்வைத்த சிட்னி வேர்பா, கேப்ரியல் ஆல்மெண்ட்  போன்றோர்  அரசியல் கலாச்சாரத்தை  பற்றிக் கூறும் போது மூன்று வகையான வகைப்படுத்தலை மேற்கொள்கிறார்கள்.  அதில் குறுகிய அரசியல் கலாச்சாரம், அகநிலை அரசியல் கலாச்சாரம், பங்குபற்றல் அரசியல் கலாச்சாரம் என்பன உள்ளடங்குகின்றன.  எந்த ஒரு நாட்டிலும் இந்த வகையான  அரசியல் கலாசாரத்தை முழுமையாக காண முடியாது.  ஏதோ ஒரு வகையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  அரசியல் கலாச்சாரத்தின் இயல்புகளைக் கொண்டு காணப்படும்.  அந்த வகையில் இலங்கையும்  அவ்வாறான பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றது.  இதனால் பொது மக்களின் அரசியல் கலாச்சாரமும் காலத்திற்கு காலம் மாறுபட்டு கொண்டிருக்கிறது.  அதனால் பொதுமக்களின் அரசியல் கலாச்சாரம் குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியம் தற்காலத்தில் காணப்படுகின்றது.

இலங்கையும்  அரசியற் கலாசாரமும்

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வது மிகவும் கடினம். பொதுவாக மூன்றாம் உலக அரசுகளாக காணப்படும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க அரசுகள் காலணித்துவத்திற்கு உட்பட்ட கலாச்சாரத்தினை ஆரம்பத்தில் கொண்டிருந்தன. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மரபுரீதியான மன்னர் ஆட்சி முறையிலிருந்து மாற்றமடைந்து காலணித்துவ ஆட்சியை தழுவின. இதன்போது பிரித்தானியரால் வழங்கப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டது. அதாவது பாராளுமன்ற மந்திரி சபை முறையை கொண்ட அரசியல் அமைப்பாகும். இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் அரசியலமைப்பின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் வறுமை, மத அடிப்படைவாதம், மற்றும் பிற்போக்குத்தனமான மக்களின் அரசியல் என்பன மரபுகளை உள்வாங்கி இருக்கின்றன.

இரண்டாம் உலக யுத்தத்துடன் ஆசிய ஆபிரிக்க நாடுகள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள எத்தனித்தன. இன்று அனைத்து அரசுகளும் சுதந்திர அரசியலா காணப்படுகின்றன. அதிகளவில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு என்பது அரசியலில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் பண்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது. பல்லின சமூகத்தில் பலமான தலைவர்களைக் கொண்ட அரசு அரசியலில் அதிகாரம் செலுத்துகிறது. இந்த நாடுகளின் இராணுவ சிந்தனைகளும், இராஜதந்திரங்களும், மத அடிப்படைவாத கருத்துக்களும், மொழி ரீதியான பிரச்சினைகளும், தேர்தல் வன்முறைகளும் முக்கியம் பெறுகின்றன. இவ்வாறான இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுக்கும் சமூகத்துக்கும் முக்கியமான தொடர்பினை ஏற்படுத்த அரசியல் கலாச்சாரம் பின்வரும் வடிவங்களில் காணப்படலாம்.

குடும்ப வழி அரசியல் கலாச்சாரம் ராணுவ அரசியல் கலாச்சாரம் பங்குபெற்று அரசியல் கலாச்சாரம் வன்முறை அரசியல் கலாச்சாரம்.    சுதந்திரத்தினை பெற்றுக்கொண்ட அரசுகள் தேசிய அடையாளம் மற்றும் இன ரீதியான அடையாளத்தை மையப்படுத்தி நாட்டை கட்டியெழுப்புவதிலும், நாடுகளில் முதன்மை கலாச்சாரத்தினை முதன்மைப்படுத்திய நாடுகளில் அரசியலில் கட்டியெழுப்புவதிலும் தேசத்தை கட்டியெழுப்பும் தோல்வியைத் தழுவினர்.

சில அரசியல் கலாச்சாரங்கள் தெளிவாக வன்முறையற்று காணப்படுவதை அவதானிக்கலாம். இங்கு இலக்கு என்பது தெளிவானதாகும். அதனை அடைவதற்கான முயற்சியும் காணப்படும். சில கலாசாரங்கள் வன்முறைக்கு செல்லக்கூடியன. இதனை பன்மைத்துவ சமூகங்கள் காணலாம். வேறுபட்ட குழுக்கள் தமது சொந்த அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ள வன்முறைக் கலாச்சாரத்தை பின்பற்றி வந்திருக்கலாம். இதனை இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் யுத்தம் என்பது அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் காணப்படலாம்.

இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் பண்புகள். 

இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தின் பண்புகள் குறித்த சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதைக் காணலாம்.  அந்தவகையில் பின்வரும் பண்புகள் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை காணப்படுகின்றன.  இவை தொடர்ச்சியாகவும் அதேவேளை மாற்ற முடியாத வகையிலும் பின்னிப் பிணைந்தாக காணப்படுகின்றது. அவை பின்வருமாறு:

  • இன்று இலங்கையில் மக்கள் மத்தியில் அரசியல்  குறித்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.
  • இலங்கையில் வன்முறை தன்மை அதிகமாக காணப்படுதல்.
  • அரசியல் முதிர்ச்சி தன்மை  குறைவாக காணப்படுதல்
  •  மக்கள்  யாப்பின்மீது பயபக்தி கொண்டவர்களாக காணப்படாமை 
  • தேசிய உணர்வு காணப்படாமை.
  • ஆண் பெண் என்ற பால் வேறுபாடு அதிகமாக காணப்படுகிறது.
  • மரபார்ந்த சம்பிரதாயங்களிலும் மதங்களிலும்  வேரூன்றி காணப்படுதல்
  • இன மத மொழி அடிப்படையில் கட்சிகள் உருவாதல்
  • தொடர்ச்சியான அரசியல் ஸ்திரத்தன்மை இலங்கையில் காணப்படாமை
  • போட்டி தன்மையான அரசியல்வாதிகளும் போட்டித்தன்மை மிகு அரசியலும்
  • மக்கள் மத்தியில் அரசியல் குறித்து போதிய தெளிவின்மை
  • மதம் மொழி இனம் சாதி என்ற அடிப்படையில் பிளவுபட்டு காணப்படல்
  • குறைந்தளவு அரசியல் பங்கு பற்றியும் விழிப்புணர்வு இன்மை
  • சிறுபான்மை மக்களை ஒடுக்கும் போக்கு
  • அரசியலில் ஊழல் அதிகரிப்பு
  • அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற செயற்பாடு.

மேற்குறித்த பண்புகளை பார்க்கின்ற போது இலங்கையின் அரசியல் கலாச்சாரம் ஆனது கீழ்மட்டத்தில் இருப்பதை காணலாம். குறிப்பாக குறுகிய அரசியல் கலாச்சாரத்திலும், ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை  பாதிப்பதிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.  இவற்றை சீர் செய்ய வேண்டுமாயின் இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தை நெறிப்படுத்த வேண்டும்... 

தொகுப்பு:

S. Vithurshan, 

Special in political science(R), 

University of Peradeniya. 



Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931