இலங்கை ஜனாதிபதி தெரிவு முறை.

லங்கை ஜனாதிபதி தெரிவு:

வேட்பாளருக்கான தகுதிகளும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்படுதலும்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும்  கீழ்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்

1. 35 வயதைப் பூர்த்தி செய்திருத்தல்

2. வாக்காளராக இருப்பதற்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்திருத்தல்.

3. மக்களால் இரு தடவைகள் / தவணைகள் ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்யப்படாதவராக இருத்தல்.

4. ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரப்படும் குற்றப் பிரேரணையின் மூலம் பதவி அகற்றப்படாதவராக இருத்தல்.

5. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்றவராக இல்லாதிருத்தல்.

மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள எவரும் ஜனாதிபதி வேட்பாளராக நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியும். அவ்வாறு ஆஜராகும் ஆளின் பெயரை

1. ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியினால் முன்வைக்கப்படுதல் வேண்டும்.

2. அல்லது தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பின் அல்லது ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பின் அவர் ஏதேனும் அரசியல் கட்சியினாலோ அல்லது ஒரு வாக்காளரினாலோ முன்மொழியப்பட வேண்டும்.

இவ்வாறான ஏற்பாடுகள் மூலம் ஜனாதிபதி வேட்பாளரானவர் சுயேட்சையாக ஆஜராகுதல் என்பது வரையறுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

வெற்றியாளரைத் தெரிவு செய்தல்

ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரைத் தெரிவு செய்தல் என்பது சிக்கலான விடயமாகும்,
சில வேளை வாக்குக் கணிப்புகளை பல தடவைகள் மேற்கொள்ள வேண்டியேற்படும்.

1.  முதற் கணிப்பின் போது இலங்கை முழுவதும் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளில் அரைவாசிக்கு மேல் (50%) வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இது அறுதிப் பெரும்பான்மை முறை கணிப்பாகும்.

2. எனினும் முதற் கணிப்பினில் எவரும் அறுதிப்பெரும்பான்மையைப் பெறாவிட்டால் இரண்டாவது கணிப்பு மேற்கொள்ளப்படும். அங்கு விருப்பு வாக்குகள் எண்ணப்படுதற்காக அதி கூடுதலான வாக்குகளைப்
முதலாவது மற்றும்   இரண்டாம் வேட்பாளைர்களைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களின் முதல் வாக்குப்பத்திரத்தில் இடம்பெறும் இரண்டாவது விருப்பு போட்டியில் தொடர்ந்து தரித்திருக்கும் முதலிரு வேட்பாளர்களுல் எவருக்கு வழங்கப்பட்டிருக்குமோ அவ்வாக்கு அவருக்கு வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டு அவரின் முதல் விருப்பு வாக்குகளின் தொகையோடு சேர்க்கப்படும்.

3. இரண்டாவது கணிப்பினில் வெற்றியாளரைத் தெரிவு செய்ய முடியாது போயின் மூன்றாவது விருப்பும் எண்ணப்படும். அச்சந்தர்ப்பத்தில் இரண்டாவது விருப்பு எண்ணப்படாத வாக்குப்பத்திரங்களிலுள்ள மூன்றாவது விருப்புக்கள் தரித்திருக்கும் வேட்பாளர்களுள் எவருக்கு வழங்கப்பட்டிருக்குமோ அவரின் முன்னைய வாக்குகளின் தொகையோடு சேர்க்கப்படும். அவ்வாறு கணிப்பீடு செய்யப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படும்.

4. தொடர்ந்து போட்டியில் தரித்துள்ள இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றிருப்பின் திருவுளச்சீட்டின் மூலம் மேலதிகமாக ஒரு வாக்கினைப் பெற்றுக் கொடுத்து வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யும் தேர்தல் முறை அறுதிப் பெரும்பான்மை முறையினதாகும். முதற் கணிப்பில் எவ்வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையை பெறாவிடின் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு போட்டியில் தொடர்ந்து தரித்திருக்கும் வேட்பாளர்களின் முதல் விருப்புகளோடு சேர்க்கப்பட்டு வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார். 1983 - 2019 வரை நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதற் கணிப்பிலேயே ஓர் அபேட்சகர் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுப்பு
சி. விதுர்ஷன்,
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.

Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931