2024 பாராளுமன்ற தேர்தலின் எதிர்பார்கை கணிப்புகளும், முடிவுகளும்: விசேட ஆய்வு மட்டக்களப்பு மாவட்டம்

2024 பாராளுமன்ற தேர்தலின் எதிர்பார்கை கணிப்புகளும், முடிவுகளும்: விசேட ஆய்வு மட்டக்களப்பு மாவட்டம்

(2024 Parliamentary Election Predictions and Results: A case study of Batticaloa District) 

இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தலில் ஒன்றாக பாராளுமன்ற தேர்தல் காணப்படுகிறது. இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 5 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் 5 ஆசனங்களுக்காக 33 சுயேட்சை குழுக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் போராட்டம் முன்னணி, ஜனசத்த பெரமுனை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 23 கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 22 கட்சிகளினதும் 27 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், கல்குடா தொகுதியில் 134,104 வாக்காளர்களும், மட்டக்களப்பு தொகுதியில் 210,293 வாக்காளர்களும், பட்டிருப்பு தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் 81 வலயங்களாக பிரிக்கப்பட்டு 442 வாக்களிப்பு நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு இடம்பெற்றன. 

தேர்தலுக்கு முன்னரான மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட வாய்ப்பாக இருக்கும் வேட்பாளர்களின் வரிசை ஒழுங்கு பின்வருமாறு :

மட்டக்களப்பு மாவட்டம் பாராளுமன்ற தேர்தல் (எதிர்பார்கை) - (13.11.2024)

சில கலந்துரையாடல் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்பு மூலம் ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. முடிவுகள் மாறலாம். 

1. TNA : மாவட்டத்தில் அதிகபட்சமாக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு காணப்படுகிறது. அதனால் ஒரு போனஸ் ஆசனம் மற்றும் வாக்குகளை அடிப்படையாக கொண்டு 1 ஆசனமும் என இரு ஆசனங்களுக்கான வாய்ப்பு நிலவுகிறது. 

வாய்ப்பு ஒழுங்கு : சாணக்கியன், சிறிநாத் / சிறிநேசன்  

2. SLMC : குறைந்தது ஒரு ஆசனத்தை பெற வாய்ப்பு காணப்படுகிறது.

வாய்ப்பு ஒழுங்கு : ஹிஸ்புல்லாஹ் 

3. TMVP : குறைந்தது ஒரு ஆசனத்தை பெற வாய்ப்பு காணப்படுகிறது. 

வாய்ப்பு ஒழுங்கு : சந்திரகாந்தன், பிரசாந்தன் 

4. NPP/DTNA/SJB : வாய்ப்பு அதிகம் முதல் குறைந்தது வரை. (ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பு) பிரபு/ஜனா/அமீர் அலி 


ஆய்வு முடிவுகள் :
  • விருப்பு வாக்கே தெரிவுக்கு அடிப்படையாக இருப்பதால் நபர்கள் மாறுபடும். 
  • கடந்த முறை ஆசனங்கள் பெற்ற பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளின் அளவில் வீழ்ச்சி ஏற்படலாம். 
  • கூட்டமைப்பு வாக்குகளில் சிறிய தளும்பல் அலை காணப்படுகிறது. 
  • சுயேச்சை குழுக்களினால் அதிக வாக்குகள் சிதறடிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. 
  • 5% குறைவான வாக்குகளை பெற்று பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுபபணம் இழக்கும்.
  • இலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும், மட்டக்களப்பில் அதன் ஆதிக்கம் குறைவாக இருப்பதை இருப்பதை காணலாம். 

கடந்த கால தேர்தலின் தரவு ஒப்பீடு (2020-2024) 

1. 2020 பாராளுமன்ற தேர்தலில், 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 409,808 (2020)

அளிக்கப்பட்ட வாக்குகள் : 314, 850(76.83) 

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 16,838 

அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 298,012 (76.83) 


2. 2024 ஜனாதிபதி தேர்தலில்,

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 449,686 (2024)

அளிக்கப்பட்ட வாக்குகள் : 327,524 (72.83) 

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் :8,876 

அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 318,648 


2024 பாராளுமன்ற தேர்தலிலுக்கான எதிர்பார்ப்பு கணிப்பு (ஆய்வின் அடிப்படையில் - 13.11.2024)

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 
449,686(2024)

அளிக்கப்பட்ட வாக்குகள் : 292, 000 to 315,000(எதிர்பார்கை) (65% to 70%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : 6000-8500 (எதிர்பார்கை கணிப்பு) 

அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 290,000 to 300,000 (எதிர்பார்கை) 

ஆயினும் அளிக்கப்பட்ட வாக்குகள் அண்ணளவாக குறைவாக காணப்பட்டது. ஆயினும் எதிர்பார்த்த அளவு காணப்பட்டது. (61% பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் சதவீதமாக). 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு வீதம் (கடந்தகால பாராளுமன்ற தேர்தல் தரவுகளின் ஒப்பீடு) 

2024 பாராளுமன்ற தேர்தலில் 61%
2020 பாராளுமன்ற தேர்தலில் 76.83%
2015 பாராளுமன்ற தேர்தலில் 69.11% 
2010 பாராளுமன்ற தேர்தலில் 59% வாக்குகளும் அளிக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்கு வீதம் குறைவடைய காரணம் :

1. 30 ஆண்டு கால சிவில் யுத்த மற்றும் அதன் வெற்றி 
2. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு 
3. மகிந்த ராஜபக்ச அரசு மீதான எதிர்ப்பு 

ஆனாலும் இந்த முறை குறைந்த அளவிலான மக்கள் பங்குபற்றல் குறைவு.  காரணம் :

1. தொடர்ந்து குறுகிய காலத்தில் தேர்தல் மீண்டும் நடைபெற்றமை (தேர்தல் ஆர்வம் குறைந்தமை) 
2. இதுவரை காலமும் பிரதான கட்சிகளின் உணர்வு பூர்வமான மக்கள், அக் கட்சிகள் மீது சலிப்படைந்தமை 
2. பிரதான கட்சிகளில் இருந்து மீண்டும் பழைய முகம் 
3. புதிய எதிர்பார்கையில் ஏற்பட்ட தோல்வி 
4. மாற்றத்திற்கான கட்சியின் பிரதான வேட்பாளர்கள் பலரை மக்கள் அறியாமை 
5. மக்களின் அரசியல் மனப்பான்மை மற்றும் கலாச்சாரம் மாற்றமுற்றமை. 

எனவே மிக குறைவான விருப்பு வாக்குளை பெற்றே பலர் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல்: 2024 (பெறுபேறுகளுக்கு முன்னரான கணிப்பு முறை) 


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்

449,686(2024)
அளிக்கப்பட்ட வாக்குகள் வீதம் 61%

2024. 11.14 (மாலை 4 மணி வரை) அளிக்கப்பட்ட வாக்குகள் அண்ணளவாக : 274, 308 வாக்குகள் (270,000-275000)

தபால் மூலம் வாக்குகள் எண்ணிக்கை

13, 116 (2024)

அண்ணளவாக எதிர்பார்கை : 90%

=11,804 (10,000-12,000)

இன்றைய வாக்குகள் +தபால் மூலம் வாக்குகள் 

274,308 +11,804= 286,112 

அண்ணளவாக எதிர்பார்கை நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : (அண்ணளவாக 7500 - 10,000)

286,112-10,000= 276,112 (அண்ணளவாக எதிர்பார்கை செல்லுபடியான வாக்குகள்) 

இதில் 5% வெட்டுப் புள்ளிக்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகளின் வாக்குகள் மொத்த செல்லுபடியான வாக்குகளில் இருந்து கழிக்க வேண்டும். 

உதாரணமாக, 

அண்ணளவாக அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகள் 276,000 என எடுத்துக் கொண்டால், 

276,000×5/100= 13,800

ஆகவே 13,800 வாக்குகளுக்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியில் இருந்து நீக்கப்படும். அதேநேரம் கட்டுப்பணம் இழப்பர். 

இதன்படி 5% குறைவான வாக்குகளை பெறும் கட்சி மற்றும் சுயேச்சை குழுக்களின் வாக்குகள் அண்ணளவாக - 25,000 எனில் 

276,000-25000 =251,000 (இதுவே ஆசன பகிர்விற்கான இறுதி தொகை)

உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக போட்டி காணப்படுகிறது. இதில் ஒரு ஆசனம் போனஸ் என்பதால் ஒன்றை கழித்து 4 இனால் மொத்த தொகை பிரிக்கப்படும். 

251,000÷4= 62750 

(அண்ணளவாக ஒரு கட்சி ஆசனத்தை பெற குறைந்தது 62750 (58000-62000) வாக்குகளை பெற வேண்டும்)

*(இந்த தொகை பெறாவிட்டால் இறுதியாக யாரிடம் அதிக மிகுதி உள்ளதோ அவர்களுக்கு ஆசனம் பகிரப்படும்). 

எதிர்பார்க்கை முடிவுகள் மற்றும் தேர்தல் முடிவுகள்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன(2024.11.15). மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி (NPP) - 03 ஆசனங்கள்

1. இராசமாணிக்கம் சாணக்கியன் - 65,458

2. ஞானமுத்து ஸ்ரீநேசன் - 22,773

3. இளைய தம்பி ஸ்ரீநாத் - 21,202

தேசிய மக்கள் சக்தி - 01ஆசனம்

1. கந்தசாமி பிரபு - 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

1. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் - 32,410

(எதிர்பார்கை ஒழுங்கு பெரும்பாலும் சரியானதாக காணப்படுகிறது. எனினும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆசனங்களை பெறவில்லை) 

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சி 55,498 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 40,139 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 31,286 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 449,686 ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 302,382

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 287,053

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 15,329 ஆகும்.

(இறுதி முடிவுகளும், எதிர்பார்கை கணிப்பு முடிவுகளும் பொருந்துகின்றது .

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு  மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியது.

இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர். 

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1,383 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  1,019 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

(தபால் மூல வாக்குளின் முடிவுகளும், எதிர்பார்கை கணிப்பும் ஒரளவு பொருந்துகின்றது)

2020 நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலும், முடிவுகளும்(ஒப்பீட்டு பார்வை). 

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 79,460 வாக்குளையும் 02 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 67,692 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.  

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் : வித்தியாசமான முடிவுகளை உருவாக்கும் என கணிப்பு சரியானது. இலங்கையில் பிறிதொரு பகுதியாக மாறியுள்ளது. 

1. கடந்த காலத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற கட்சியின் தோல்வி (மக்கள் விரும்பும் மாற்றம்)

2. கடந்த முறை போல 3 ஆசனத்தை பெற்றாலும், வாக்கு வங்கிகளில் சரிவு (ITAK)

3. கடந்த முறை நிராகரிக்கப்பட்ட SLMC இந்த முறை வெற்றியை உறுதி செய்தது.

4. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குகள் இனத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. 

5. இனக் கட்சி, பிரதேச கட்சி, தேசிய கட்சி என மூன்று கட்சிகளிக்கு ஆசனம் கிடைத்தது. 

பெரும்பாலான எதிர்பார்கை பொருந்துவதுடன், பெறுபேறுகளின்படி கணிப்புகள் சில தவறானதாக மாறியிருக்கிறது. 

1. எதிர்பார்கையை விட அதிக ஆசனம் மற்றும் வாக்குகளை இலங்கை தமிழரசுக்கட்சி பெற்றமை. 

2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எதிர்பார்கை வாக்குகளை பெறவில்லை மற்றும் ஆசனங்கள் கிடைக்கவில்லை.  

குறிப்பு : இது தனிப்பட்ட கருத்தல்ல. மேலும் மக்கள் மத்தியில் காணப்பட்ட கருத்துக்கள், சமூக வலைத் தளங்களின் தகவல்கள், கலந்துரையாடல் மற்றும் சில வினாக்கொத்து மூலமும், இரண்டாம் நிலைத் தரவுகள் மூலமும் தொகுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளாகும். 

தொகுப்பு :

சி. விதுர்ஷன், BA(Hons) Special in Political science, MA in Political science, M. Phil (R) FGS (UOC) 
வருகைதரு விரிவுரையாளர், 
அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத் துறை, 
கொழும்புப் பல்கலைக்கழகம்

 

Comments

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931