அலகு மீட்டல்.
ஜனநாயகம்
மாதிரி வினாத்தாள்.
1-15 வரையான வினாக்களுக்கு அறிவுறுத்தலை வாசித்து பொருத்தமானதை தெரிவு செய்க.
1. பிரஜைககளின் பங்குபற்றல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான தேர்தல் முறையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய நியதிகளில் அடங்காதது.
1. போட்டித்தன்மை
2. அந்தரங்கம்
3. நியாயத்தன்மை
4. காலத்திற்கு காலம் தேர்தல் நிகழாமை
5. உள்ளீர்த்தல் (inclusivity).
2. தடைகள் சமன்பாடுகள் எண்ணக்கருவில் அடங்காதது,
1. ஒரு துறை தனது அதிகாரத்தை மீறி செயற்படும்போது ஏனைய இரு துறைகளும் அதனை தடுத்து சமநிலை செய்வதாகும்.
2. சமநிலை தலையீடுகளை மேம்படுத்த அரசாங்க அதிகாரம் பகிரப்பட்டு இருத்தல் வேண்டும்.
3. ஐக்கிய அமெரிக்க குடியரசில் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் தலையீடும் சமநிலை கொள்கையும் செயற்படுத்தப்படுகின்றது.
4. அரசாங்கத்தின் அதிகாரத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
5. அரசாங்கம் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பர் என்னும் அச்சத்தில் உருவானதாகும்
3. இலங்கை அரசியல் யாப்பில் காணப்படும் ஜனநாயகம் சார் அம்சங்களின் தொகுதி.
A. சட்டத்தின் ஆட்சி
B. நிறைவேற்று ஜனாதிபதி முறையும், அதிகாரக் குவிப்பும்.
C. பாராளுமன்றுக்கு பொறுப்புக்கூறும் அமைச்சரவை.
D. அதிகார பரவலாக்கம்.
E. சர்வஜன வாக்குரிமையும், பிரதிநிதித்துவ ஜனநாயகமும்.
4. பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதில் தவறான கூற்று,
1. சாதாரண மக்களை அரசியலில் இருந்து தூரப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின்
உறுதி தன்மையை பெறுவதற்கு உதவி புரியும்.
2. ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரயோக வடிவத்தை தருகின்றது.
3. ஆட்சி பற்றிய தீர்மானம் எடுக்கும் பொறுப்பிலிருந்து சாதாரண பிரஜைகளை விடுவிக்கின்றது.
4. நிபுணத்துவ அறிவுடைய ஆட்சியை ஒப்படைக்க வாய்ப்பளிக்கிறது.
5. ஆள்வோர்- ஆளப்படுவோர் தீமையை இல்லாது அளிக்கின்றது.
5. தாராள ஜனநாயக அரசாங்கம் ஒன்றின் அடிப்படைப் பண்புகளின் தொகுதி,
A. அரசாங்கம் ஓர் அரசியல் யாப்பின் அடிப்படையில் செயல்படுதல்.
B. சட்ட, நிறைவேற்று, நீதித்துறைக்கு இடையே அதிகாரம் வேறுபடுத்தப்பட்டு இருத்தல்.
C. சட்ட நிறைவேற்றுத்துறைகளுக்கு மேலால் நீதித்துறையின் ஆதிக்கம் காணப்படுதல்.
D. ஆட்சியாளர் பொது மக்களுக்கு பொறுப்புக் கூறல்.
E. காலாகாலப் போட்டித் தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுதல்.
6. அதிகார வேறாக்கம் என்பதில் பொருத்தமான கூற்றுக்களின் தொகுதி,
A. அரசாங்கத்தின் மூன்று பிரதான பணிகளும் ஒன்றிலிருந்து மற்றையவை பிரிந்திருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் கோட்பாடாகும்.
B. ஜனநாயக ஆட்சிக்கும் மக்களின் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கும் இன்றியமையாத மூலக்கொள்கையாக கருதப்படுகின்றது.
C. "ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பின் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்" என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
D. சமஸ்டி அரசாங்கங்களின் மத்திக்கும் சமஸ்டி அலகுகளுக்கும் இடையில் அதிகாரங்களை பங்கீடு செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடாகும்
E. 1789 அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கோட்பாடாகும்.
7. தாராள ஜனநாயக அரசாங்கத்தின் பிரதான பண்புகளின் சரியான கூற்றுக்களின் தொகுதி,
A. பொருளாதாரம் அரசினால் கட்டுப்படுத்தப்படுதல்.
B. நீதித்துறையின் சுதந்திரத்துடன் கூடிய சட்டவாட்சியைக் அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம்.
C. சிவில் சுதந்திரங்களும் தனி மனித உரிமைகளும் ஊடக சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டு இருத்தல்.
D. சர்வஜன வாக்குரிமையையும் அரசியல் பன்மைவாதத்தின் ஏற்புடைமையையும் அடிப்படையாகக் கொண்ட காலாகாலத் தேர்தல்கள்.
E. ஒழுங்கமைந்த குழுக்களும் நலனங்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஆரோக்கியமான சிவில் சமூகம்.
8. ஜனநாயக அரசாங்க முறையின் பிரதான பண்புகளில் சரியான கூற்றுக்களின் தொகுதி.
A. யாப்புறு அரசாங்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி
B. மக்கள் இறைமை மற்றும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பொறுப்புக் கூறல்
C. நீதித்துறையின் சுதந்திரம்
D. போட்டிக்கட்சி முறை மற்றும் ஊடக சுதந்திரம்
E. சகலரும் சமமானவர்கள்: ஆனால் சிலர் ஏனையோரை விட அதிகம் சமமானவர்கள் என்ற சித்தாந்தத்தை அங்கீகரித்தல்.
9. ஜனநாயக ஆட்சியின் மூல தத்துவங்கள் அடங்கிய தொகுதி.
A. யாப்புறு அரசாங்கம் மற்றும் யாப்பை மதித்தல்.
B. அரசாங்கத்தின் ஒளிவுமறைவற்ற தன்மையும் ஆட்சியாளர்கள் பொது மக்களுக்கு பொறுப்புக் கூறலும்.
C. சட்டத்தின் ஆட்சியை மதித்தலும் நீதிமன்ற சுதந்திரமும்.
D. ஊடகங்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தின் செயற்பாடுகளுக்கான சுதந்திரம்
E. மனித உரிமைகளை கட்டுப்படுத்தல்
10. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்கள் பிரதான பண்புகளில் அடங்காதது.
1. காலாகாலத்தில் நடத்தப்படுதல்.
2. பகுத்தறிவு ரீதியாக தீர்மானம் எடுப்பதற்கு வாக்காளர்களுக்கு பூரண சுதந்திரம் இருத்தல்
3. தேர்தல் தகுதி வாய்ந்த எவருக்கும் வேட்பாளர்களாக நிற்பதற்கு சுதந்திரம் இருத்தல்.
4. இனம், பால், கல்வி, தகுதிகளை கருத்திற் கொண்டு வாக்குரிமை வழங்குதல்.
5. சகல வாக்குகளையும் கணிப்பிட்டு பெறுபேறுகளை வெளிப்படையாகவும் சரியாகவும் வெளியிடுதல்.
11. சட்டத்தின் ஆட்சியின் பண்பில் சரியானது,
1. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கின்றது.
2. அரசியல் தலைவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.
3.A.V டைசியால் எதிர்க்கப்பட்ட கொள்கையே சட்டவாட்சி ஆகும்.
4. ஆட்சியாளர்கள் சட்டத்துக்கு மேம்பட்டவர்களாக திகழ்கின்றனர்.
5. ஒரு சிலருக்கு மட்டும் பாதுகாப்பை வழங்குகின்றது.
12. நேரடி ஜனநாயகமானது கருத்துக்களில் சரியான கூற்றுக்களின் தொகுதி,
A. புராதன நகர அரசுகளில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது.
B. நல்லாட்சியை பலப்படுத்துகின்றது.
C. மக்களின் திறமையை குறைக்கின்றது.
D. ஒப்பங்கோடல் நேரடி ஜனநாயகத்தில் அடங்குகின்றது.
E. மக்களிடத்தில் ஜனநாயகத் தன்மையை வளர்க்கின்றது.
13. ஒரு ஜனநாயக அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய பண்புகளில் சரியான கூற்றுக்களின் தொகுதி,
A. மக்களின் உரிமைகளை குறைத்தல்.
B. மக்களின் அதிகாரத்தை பாதுகாத்தல்.
C. சிறந்த சட்ட முறைமை காணப்படுதல்.
D. அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டிருத்தல்.
E. முத்துறைகளும் சிறப்பாக தொழிற்படும்.
14. நீதித்துறையின் சுதந்திரத்தை உள்ளடக்கிய சரியான கூற்றுக்களில் தொகுதி.
A. நீதிபதிகள் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்.
B. சேவைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
C. நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கலாமே தவிர குறையக்கூடாது.
D. அரசியல் தலையீடுகள் காணப்பட வேண்டும்.
E. திரட்டு நிதியிலிருந்து நீதிபதிகளுக்கு சம்பளம் வழங்கப்படவேண்டும்.
15. வலுவேறாக்க கோட்பாட்டுக்கு பொருந்தும் கூற்றுத் தொகுதி,
A. சுதந்திரத்தை பாதுகாப்பது நோக்கமாகக் கொண்டது.
B. முத்துறைகளும் தனித்தனியே இருத்தல் வேண்டும் என மொண்டஸ்கியு குறிப்பிடுகின்றார்.
C. முத்துறைகளுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்க முடியாது என விமர்சனங்கள் இதற்கு எதிராக எழுந்தன.
D. தாராள ஜனநாயகத்திற்கு எதிராக அமைகின்றது.
E. அரசாங்கத்தின் பிரதான பணிகளை பிரிக்க வேண்டும் என்று கூறுகின்றது.
சி. விதுர்ஷன்.
அரசியல் விஞ்ஞானத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்


Comments
Post a Comment