மோதல் மற்றும் மோதல் தீர்வு.


மோதல், சமூகத்தின் சகல படித்தரங்களிலும் காணப்படும் ஒரு சமூகத்தோற்றப்பாடாகும். சமூகத்தில் காணப்படும் இயல்பான ஒரு பண்பாகிய பல்வகைமையின் விளைவே மோதலாகும் எனவும் குறிப்பிடலாம். ஆட்களின் ஆசைகள், தேவைகள், குறிக்கோள்கள், பெறுமானங்கள், அங்கீகாரங்கள் என்பவற்றில் காணப்படும்  ல்வகையே மோதல்களால் காட்டப்படுகின்றது. சமூக மட்டத்தில் மேலும் பல விடயங்களால் குழுப் பல்வகைமை உருவாகின்றது. மொழி, சமயம், சாதி,பிரதேசம்போன்ற தனித்துவ அம்சங்கள் பாரிய பங்களிப்பைச் செய்கின்றன. எனவே சமூகமட்டத்தில் பல்வகைத் தன்மை காணப்படுகின்றது. அப்பல்வகைமை காரணமாக சமூகத்தின் சகல படித்தரங்களிலும் காணப்படும் ஒரு தொழிற்பாடாக மோதலை இனங்காண முடிகின்றது. அது சமூகத்தில் காணப்படும் பல்வேறு கருத்தையும் போட்டாப்போட்டி நிலைப்பாடுகளையும் வெளிக்காட்டும் ஓர் ஊடகமுமாகும். மோதல் எனும் எண்ணக்கரு சமூக நடத்தையின்போது ஆக்கபூர்வமானதாகவோ அழிவுபூர்வமானதாகவோ இருக்க இடமுண்டு. மேலும் மோதலானது சமூக இயக்கத்தன்மையின் ஒரு சக்தியுமாகும். 

மோதல் - அறிமுகம்

பொதுப் பிரயோகத்தில் மோதல் எனும் பதம் மட்டுமன்றி பிணக்கு, நெருக்கடி, சண்டை, வன்முறை போன்ற பதங்களும்
பயன்படுத்தப்படுகின்றன. அவ்வர்த்தங்களை நோக்குகையில் மோதல் என்பதன் மூலம் பிணக்கு, நெருக்கடி, சண்டை, வன்முறை போன்றவை கருதப்படுகின்றன எனக்
குறிப்பிடலாம். எனினும் மோதல் குறித்து பகுத்தறிவு ரீதியில் நோக்கும்போது இவற்றுக்கும் மோதலுக்கும் இடையே தெளிவான வேறுபாடு காணப்படுகிறது.
மோதல்கள் சமூகத்தில் எல்லாப் படித்தளங்களிலும் மனிதத் தொடர்புகளுடனும் பிணைந்து காணப்படுகின்றன. மோதல் என்பது இருவருக்கு இடையே அல்லது
அதற்கு மேற்பட்டோரிடையே அல்லது இரண்டு தரப்பினருக்கிடையே அல்லது
இரண்டுக்கு மேற்பட்ட தரப்பினருக்கிடையே அல்லது இரண்டு நாடுகளுக்கு இடையே அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே காணப்படும் இணக்கப்பாடற்ற கலவர நிலையாகும்.

தெரிவு செய்யப்பட்ட வரைவிலக்கணங்கள்.

போட்டா போட்டியான அபிலாஷைகள், பல்வேறுபட்ட தனித்துவங்கள் மற்றும் மனப்பாங்கு மாற்றங்கள் காரணமாக, ஆட்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையே உருவாகும் எதிர்ப்பை மோதல் எனலாம்.

- James A. Schellenberg

ஒன்றுக்கொன்று எதிரான குறிக்கோள்கள் - இலக்குகளை அடையும் முயற்சியின்போது
சுயாதீனமான தனியாட்களுக்கு இடையில் நிகழும் இடைத்தொழிற்பாட்டை மோதல்
எனக் குறிப்பிடலாம்.

-J.L.Hocker and W.W.Wilmot

ஒன்றுடனொன்று பொருந்தாத குறிக்கோள்களைக் கொண்ட ஆட்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் அது தொடர்பாக கருத்து வெளியிடும் போது சமூக மோதல்கள்
தோன்றும்.

- Louis Kriesourz

வன்முறையான எதிர்ப்படுதல், போராட்டம் அல்லது உளரீதியில் நிகழும் போராட்டமே மோதல் ஆகும்.

- The Webster English Dictionary

ஆட்குழுக்கள் அல்லது அரசுகள் பாரதூரமான இணக்கப்பாடின்மைகள் அல்லது விவாதத்துக்குள்ளாகியுள்ள நிலைமைகளில் மோதல்கள் உருவாகும்.

- The Oxford Dictionary

மோதல் என்றால் என்ன என நோக்குகையில் அண்மைக் காலத்தில் மோதல் பற்றிய கற்கையின் விருத்தியில் பாரியளவில் பங்களிப்பு செய்துள்ள பேராசிரியர் ஜொஹான் கல்டுங்என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள மோதல் பாகுபாட்டுக்கான மாதிரி முக்கியமானது. அது மோதல் முக்கோணி எனப்படும். அதன்மூலம் மோதலினால் காட்டப்படும் ஒன்றுடனொன்று தொடர்புடைய அமைப்புக்கள், மனப்பாங்குகள், நடத்தைகள் என்பன தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. அதனைப் பின்வரும் படத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.


இக்காரணிகள் சில வேளைகளில் வெவ்வேறாகவும் சில வேளைகளில் ஒன்றுடனொன்று இணைந்தும் காணப்படலாம். இங்கு சூழமைவு என்பதனால் கருதப்படுவது மோதலுக்கு ஏதுவாகும் நிலைமையாகும். ரொபட் மிக்வெல் என்பவரின் கருத்துப்படி, இந்நிலைமையானது சமூகப் பெறுமானங்கள் மற்றும் சமூக அமைப்பின் ஒவ்வாப் பொருத்தப்பாடு காரணமாக உருவாகும் மற்றொரு அம்சமாகிய மனப்பாங்கு மூலம் மோதலை உருவாக்கும் உளவியல் காரணிகளின்பால் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. மோதலின் மற்றைய அம்சமாக நடத்தையைக் குறிப்பிடலாம். மோதலுடன் தொடர்புடைய குழுக்களால் ஒருவருக்கொருவர் அழிவு ஏற்படுத்தல் தொடங்கும்போது மோதலின் டத்தைகள் தெளிவாகத் தெரியும். மோதல் தொடர்பான ‘கல்டுங்’ முக்கோணத்தின்படி மோதலொன்று மேற்குறிப்பிட்ட எந்தவோர் அம்சத்திலும் ஆரம்பிக்க இடமுண்டு. எனவே மோதலானது விகிதசமனற்ற இலக்குகள், மறுதலிக்கும் மனப்பாங்குகள், அழிவு பூர்வமான நடத்தைகள் காரணமாக உருவாக இடமுண்டு. மோதல் என்பது இயல்பிலேயே கேடான ஒன்றல்ல. மனித வரலாறானது முதன்மையாக, வகுப்பு மோதல்களின் வரலாறும், வகுப்பு மோதல்களுடனானவற்றை முன்னோக்கிச் செலுத்தும் சக்தியுமாகும் என கால்மாக்ஸ் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக நோக்குமிடத்து, சமூகத்தில் காணப்படும் பல்வேறு கருத்துக்கள், போட்டா போட்டி, நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக மோதல் செயற்படுகின்றது என்பது தெரிகின்றது. தனியாட்கள் அல்லது சமூகக் குழுக்கள் அவ்வாறான பொருத்தப்பாடற்ற நிலைமைகளுடன் செயற்படும்வி தத்தின்படி, மோதலானது ஆக்கபூர்வமானதாகவோ அழிவுபூர்வமானதாகவோ அமைய இடமுண்டு.

எனவே மோதலின் சக்தி சாதகமான ஒன்றாக அல்லது பாதகமான ஒன்றாக அமையலாம். சிலபோது மோதல் எனும் தோற்றப்பாடானது சமூக மாற்றங்களையும் புதுமைப்பாடுகளையும் இனங்காணத் துணையாக அமையும். எனினும் மோதலானது, 

மனித உயிர்களை அழிக்கத்தக்க ஒரு நெருக்கடியாகவோ ஆயுதமேந்திய அழிவுபூர்வமான போராட்டமாகவோ மாறுமாயின் நிச்சயமாக அது சமூகத்தின் முன்னேற்றத்துக்குப் பாரிய தடையாக அமையூம். அதன் மூலம் ஏற்படும் பௌதிக,உள ரீதியான தாக்கம் மிக உயரிய மட்டத்தைக் கொண்டிருப்பதே அதற்கான காரணமாகும்.

மேற்படி விளக்கங்களின்படி எந்தவொரு மோதலிலும் பின்வரும் முதன்மையான இயல்புகள் காணப்படும்.

1. எதிர்த்தரப்பினர் அதற்கு அல்லது எதிரான இருவர் அல்லது மேற்பட்டோர் காணப்படுதல்.

2. அவர்கள் பரஸ்பரம் எதிரான வழிமுறைகளில் ஈடுபடுகின்றமை.

3. அவர்களது பரஸ்பரத் எதிர்த்தொழிற்பாடானது வளத்தட்டுப்பாடு அல்லது நிலைமைகளின் விகித சமமின்மை காரணமாக உருவாகியுள்ளது.

4. அவர்களது நடத்தையானது எதிர்த்தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல், சேதம் விளைவித்தல் மற்றும் அழிவு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டது.

5. அவர்களது பரஸ்பரத் தொழிற்பாட்டை வெளிப்படையாகக் காணமுடியுமாகையால் வெளித்தரப்பினருக்கு அதனை மதிப்பிடவும் முடியும்.

6. மோதலின் தன்மைக்கேற்ப அது ஆக்கபூர்வமானதாகவோ, அழிவுபூர்வமானதாகவோமைய இடமுண்டு.

7. மோதல்களில் சாதகமான இயல்புகளும் பாதகமான இயல்புகளும் காணப்படும்.

8. அவர்களது நடத்தைகள் மூலம் எதிர்த்தரப்பினருக்கு சேதம் விளைவிக்க, 

காயமேற்படுத்த அல்லது அவர்களை முற்றாக அழித்தொழிக்க எதிர்பார்த்தல்.


மோதலின் மூலங்கள்/அடிப்படை காரணங்கள்/மூலக் காரணங்கள். 

1. நலிவான அரசு, அரசின் உள்வாரி பாதுகாப்புப் பிரச்சினைகள், இன அடிப்படை. 

புவியியல் அடிப்படை போன்ற அமைப்பு சார்ந்த காரணிகள்.

2. பொருளாதார முறைமையில் இடம்பெறும் புறக்கணிப்பு, நவீனமயமாக்கம் போன்ற

பொருளாதார, சமூகக் காரணிகள்.

3. அரசியல் நிறுவனங்களில் நிகழும் மாற்றங்கள், தேசிய கருத்துக்கள், அபிப்பிராயங்களைப் புறக்கணித்தல், இடைக் குழுக்கள், அரசியல், உயர்குடி அரசியல் போன்ற அரசியல் காரணிகள்.

4. பண்பாட்டை மாற்றியமைக்கும் பிரச்சினைகளைக் கொண்ட குழுக்களின் வரலாறுகள்.

தொகுப்பு:

S. Vithurshan, 

Special in political science. 

University of Peradeniya. 

Comments

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931