இலங்கையும், ஐக்கிய நாடுகள் சபையும்.
அறிமுகம்
இன்று சர்வதேச அளவில் முக்கியம் பெறுவதும், முதன்மையானதுமான அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. முதலாம் உலகப் போரை தொடர்ந்து அதனால் ஏற்பட்ட பாரிய விளைவுகள் காரணமாக அது போன்றதொரு யுத்தமோ நாசகார அழிவுகளோ ஏற்படக் கூடாது என்பதற்காக சர்வதேச சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.இது வூட்ரோவில்சனின் பதினான்கு அம்ச கோரிக்கைகளுள் ஒன்றாக கானப்பட்டது. எனினும் இதன் செயற்பாடுகள்
போதியளவான செயற்பாடுகளையோ அமைதியை நிலைநாட்டவோ இல்லை இதற்கு காரணம் அரசுகள்
சர்வதேச சங்கத்தின் விதிகளை அல்லது சட்டங்ளை மீறி செயற்பட்டமை ஆகும். இதன் பலவீனம்
காரனமாகவே இரண்டாம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்தே 1944ம் ஆண்டில்
ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் முதலிய அச்சு நாடுகளுக்கு எதிராக இரண்டாம் உலகப்போரை
நடத்தி வந்த அமெரிக்கா
பிரிட்டன், சோவியத் யூனியன், சீனா முதலிய நாடுகள் ஆகஸ்ட் 21ம் திகதி வாஸிங்டன் ஒக்ஸ் என்ற பகுதியில் ஒரு மாநாட்டை கூட்டி ஆலோசித்து வந்தன. அதற்கு டம்பர்டன் ஒக்ஸ் மாநாடு என்று பெயர். இதனடிப்படையில் 1945 ஜீன் 26ம் திகதி முறைப்படியாக பல நாடுகளும் ஏற்றுக் கொண்டதன் வாயிலாக அன்றைய தினத்திலிருந்து உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது. மேற்படி உருவாக்கபட்ட ஐக்கிய நாடுகள் சபையானது அதன் தோற்றிய காலத்திலிருந்து இன்றுவரைக்கும் உலக சமாதானத்தை பேணுவதில்பாரிய பங்காற்றியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
உலக சமாதானம் பாதுகாப்பு என்ற அடிப்படை எண்ணக்கருக்களை வளர்க்கும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் உருவாக்கபட்டது. இவ் அமைப்பானது பொதுச் சபை, பாதுகாப்பு சபை, சமூக, பொருளதார சபை, நம்பிக்கை பொறுப்பு சபை செயலகம் சர்வதேச நீதிமன்றம் போன்ற பிரதான அமைப்புக்களை கொண்டு காணப்படுகின்றது. இவைகள் Pevention Peacemaking Peacekeeping Peace building and disarmament போன்ற தத்துவங்களில் அடிப்படையிலேயே செயற்படுகின்றன. எனவே உலக சமாதானத்தை பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபையானது முக்கியமானதொரு பங்கினை வகித்து வருகின்றது. எனவே இருபதாம் நூற்றாண்டில் உலக சமாதானத்தை பேணுவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச தாபனங்களுள் முக்கியமான ஒரு சபையாகவும் இன்றியமையாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. 2020 தரவின்படி193 நாடுகள் அங்கத்துவம் வகிக்கிறது. இதில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கைக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டதானது.
இலங்கையும், ஐக்கிய நாடுகள் சபையும்.
ஐக்கிய நாடுகள் சபை 1952 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தனது பணிகளை
முன்னெடுத்துவருவதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன்
முதன்முதலாக இணைந்துகொண்ட நாடுகளுள் ஒன்றாகவும் இலங்கை காணப்படுகின்றது. மூன்று
ஆண்டுகளின் பின்னர் 1955 டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை உறுப்புநாடு
என்ற அந்தஸ்தையும் இலங்கை பெற்றுக்கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் வெளிப்படையான
உடன்படிக்கையொன்று அமுலில் உள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கையில்
ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு தனது பணிகளுக்கான நிதி வழங்கல் நடவடிக்கைகள் அனைத்தையும்
அதற்குப் பொறுப்பான அமைச்சுக்களின் மூலமாவே மேற்கொண்டுவருகின்றது. .
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தனது பணிகளை முன்னெடுத்துவந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கையிலுள்ள மக்களின் வாழ்வுகளை மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றது. அரசாங்கம், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பாரிய சமூகம், இருதரப்பு நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் விரிவான பங்குடமைகளைக் கொண்டுள்ளதுடன், நீண்டகால அபிவிருத்தி மற்றும் அவசர நிலைமைகள் தொடர்பில் எழுகின்ற பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்கம் தீர்வுகளை அறிமுகப்படுத்திவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கை ஆகியவற்றிற்கிடையிலான பங்கு
இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றிற்கிடையில் பரஸ்பரம் நன்மையளிக்கும் வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுவதுடன், இடைச்செயற்பாடுகள் மிக்க உறவுமுறையும் நிலவிவருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு தீவிர உறுப்புநாடு என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைத்திட்டங்களை வகுத்து உலகெங்கிலும் அவற்றை அமுல்படுத்துவதற்கு இலங்கை ஒருபுறத்தில் உதவிவருவதுடன், மறுபுறத்தில் இலங்கைதேசம் மற்றும் அங்கு வாழுகின்ற மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதித்துவம்
இலங்கை சுதந்திரமடைந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் 1955 டிசம்பரில் ஐக்கிய
நாடுகள் சபையில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதுடன், அன்று முதல் சர்வதேச சமூகத்துடன்
மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றிவருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு
விதிமுறைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான நடைமுறைகளுக்கு பங்களிப்பு
வழங்கிவருகின்ற இலங்கை தனது உறுப்புரிமையின் மூலமாக நன்மையளிக்கும் ஒரு
உறவுமுறையைப் பேணிவருகின்றது.
இலங்கை கடந்தகாலங்களில் பின்வரும் ஐநா உறுப்பு சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது:
பொதுச் சபை
1976 ஆம் ஆண்டு பொதுச்சபை அமர்வு, 1978 ஆம் ஆண்டு ஆயுத ஒழிப்பு அமர்வு என
அனைத்துப் பொதுச்சபை அமர்வுகளிலும் இலங்கை சமூகமளித்து வந்துள்ளது. சட்டசபை
விவாதமே பொதுச்சபை அமர்வின் பிரதான விடயமாக உள்ளது. அனைத்து உறுப்புநாடுகளினதும் பிரதிநிதித்துவத்தைக்
கொண்டுள்ள ஒரேயொரு ஐநா உறுப்புச் சபையாக இது காணப்படுகின்றது. ஒவ்வொரு
உறுப்புநாட்டிற்கும் ஒரு வாக்குரிமை உள்ளது. சர்வதேச பாதுகாப்பு முதல் ஐநா
வரவுசெலவுத்திட்டம் வரை ஐநாவின் நிலைப்பாடு தொடர்பான எவ்விடயத்தையும்
உறுப்புநாடுகள் இங்கு கலந்தாலோசிக்க முடியும். வாதப்பிரதிவாதங்களின் அடிப்டையில்
சபை தனது பரிந்துரைகளை முன்வைக்கும். ஆயினும் அவற்றை அமுல்படுத்துமாறு நாடுகளைக்
கட்டாயப்படுத்தும் அதிகாரம் இதற்குக் கிடையாது, ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர்
நடுப்பகுதி முதல் மூன்று மாதங்களுக்குக் கூடுகின்ற பொதுச்சபை விசேட மற்றும் அவசர
நிலைமைகளின் கீழும் கூட்டப்படுகின்றது. பொது விவாதம் ஒன்றுடன் அதன் வருடாந்த
அமர்வுகள் ஆரம்பிப்பதுடன், இதன்போது உறுப்புநாடுகள் ஒவ்வொன்றும் உலக நிகழ்வுகள்
தொடர்பான தமது முன்னோக்கு அறிக்கையை சமர்ப்பிக்கின்றன.
பாதுகாப்புச் சபை
இலங்கை 1960-65 ஆம் ஆண்டு வரை நிரந்தரமற்ற உறுப்புரிமையைக் கொண்டிருந்தது. உலக
அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தம் பணியை இச்சபை
மேற்கொண்டுவருகின்றது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய
அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளை இது கொண்டுள்ளது. மேலும் பத்து
நாடுகள் சுழற்சி அடிப்படையில் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுவருகின்றன.
பொருளாதாரத் தடைகளை விதித்தல் மற்றும் சண்டைகளை முடிவிற்குக் கொண்டுவரும்
நடவடிக்கைகளை அங்கீகரித்தல் போன்ற அதிகாரங்களையும் இச்சபை கொண்டுள்ளதுடன்
அமைதிகாக்கும் நடவடிக்கைகளையும் இது மேற்பார்வை செய்துவருகின்றது.
செயலாளர்
செயலாளர் நாயகம் பதவிக்கான கடந்த வாக்கெடுப்பில் ஜயந்த தனபால அவர்கள்
அபேட்சகராக இடம்பெற்றிருந்தார். இச்செயலாளர் பதவியை இதுவரையில் பல இலங்கையர்கள்
வகித்துவந்துள்ளனர். ஐநாவின் அன்றாடப் பணிகள் மற்றும் அமைப்பின்
நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நிர்வகித்தல் போன்ற பணிகளை செயலாளர்களே
முன்னெடுத்துவருகின்றனர். 170 நாடுகளைச் சார்ந்த 7,500 செயலாளர்கள் இச்செயலகத்துடன் இணைந்து
பணியாற்றிவருகின்றனர்.
பொருளாதார மற்றும் சமூக சபை
ஐநாவின் பொருளாதார, சமூக, மனிதாபிமான மற்றும் கலாச்சாரச் செயற்பாடுகளை
இச்சபையே வழிநடாத்திவருகின்றது. மனித உரிமைகள், சமூக அபிவிருத்தி, தொழில்நுட்பம்,
போதைமருந்து மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பான வேலைத்திட்டங்களை இது மேற்பார்வை
செய்துவருகின்றது. பொதுச்சபையின் மூலமாவே இதற்கான 54 உறுப்பினர்கள் தேர்வு
செய்யப்பட்டுவருகின்றனர்.
சர்வதேச நீதிமன்றம்
ஐநாவின் பிரதான நீதித்துறையாக உள்ள இந்த நீதிமன்றம் நாடுகளால்
சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டப்பிரச்சனைகளுக்கு சமரசம் காணும் முயற்சிகளை
மேற்கொண்டுவருகின்றது. நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.
இந்த நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளும் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபை
ஆகியவற்றினால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அமைதிகாக்கும் நடவடிக்கைகள்
ஐநாவிற்கு தனது துருப்புக்களை அனுப்பிவைக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை 16
ஆவது இடத்தில் காணப்படுகின்றது. ஹெயிட்டி, இவாயர், சூடான், மேற்கு சகாரா,
மொசாம்பிக், கிழக்கு தீமோர் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் ஐநா துருப்புக்கள்
பணியாற்றியுள்ளன .போரினால் சிதைந்தபோன நாடுகளுக்கு உதவி, அங்க அமைதியை
நிலைநாட்டுவதற்கான நிலைமைகளைத் தோற்றுவிக்கும் வலிமைமிக்க கருவியாக ஐநா அமைதிகாக்கும்
படைகள் செயற்படுகின்றன. ஐநா அமைதிகாக்கும் படைகளின் தொழிற்பாடுகள் மற்றும்
அவற்றின் நோக்கங்கள் மற்றும் ஆணைகளை பாதுகாப்புச் சபை தீர்மானிக்கின்றது. ஐநா
அமைதிகாக்கும் பணிகள் முதன்முதலாக 1948 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன்,
இதுவரை உலகெங்கும் 63 ஐநா அமைதிகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாநாடுகள் (உடன்படிக்கைகள்)
முக்கியமான ஐநா உடன்படிக்கைகள் பலவற்றில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. (இலங்கை ஒப்புதல் அளித்துள்ள உடன்படிக்கைகளின் விபரங்கள் வருமாறு):
- அனைத்து வடிவிலான இனப்பாகுபாடுகளையும் இல்லாதொழிக்கும் சர்வதேச உடன்படிக்கை (1982 மார்ச் 20 முதல் அமுலில் உள்ளது)
- சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை. (1980 செப்டெம்பர் 11 முதல் அமுலில் உள்ளது)
- சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை. (1998 ஜனவரி 03 முதல் அமுலில் உள்ளது)
- பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பேணும் சர்வதேச உடன்படிக்கை (1980 செப்டெம்பர் 11 முதல் அமுலில் உள்ளது)
- பெண்களுக்கெதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கை (1981 நவம்பர் 04 முதல் அமுலில் உள்ளது)
- பெண்களுக்கெதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளையும் ஒழிக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை (2003 ஜனவரி 15 முதல் அமுலில் உள்ளது)
- சித்திரவதை, ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற தண்டணைகளுக்கெதிரான உடன்படிக்கை (1994 பெப்ரவரி 02 முதல் அமுலில் உள்ளது)
- சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை (1991 ஆகஸ்ட் 11 முதல் அமுலில் உள்ளது)
- ஆயுதமோதலில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை (2002 பெப்ரவரி 12 முதல் அமுலில் உள்ளது)
- சிறுவர்களை விற்றல், சிறுவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்தல் மற்றும் சிறுவர்களின் நிர்வாணப் பகைப்படங்களை வெளியிடுதல் ஆகியவற்றிற்கு எதிராக சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை (2006 ஒக்டோபர் 22 முதல் அமுலில் உள்ளது)
- புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை (2003 ஜூலை 1 முதல் அமுலில் உள்ளது)
- அங்கவீனர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை (2007 மார்ச் 30 இல் கையெழுத்து)
தீர்மானங்கள்
1971 ஆம் ஆண்டு இந்து சமுத்திர அமைதி வலயம், 1987 ஆம் ஆண்டினை இருப்பிடமற்றவர்களுக்கு புகலிடம் அளிக்கும் சர்வதேச ஆண்டாகப் பிரகடனப்படுத்தல், 1999 ஆம் ஆண்டில் வெசாக் தினம் ஒரு ஐநா விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை போன்ற இலங்கையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஐநா தீர்மானம் ஒன்றை எந்தவொரு ஐநா உறுப்பு சபையும் ஏற்றுக்கொள்ளும் மூலமாக அது உள்ளது. எந்தவொரு ஐநா உறுப்புச்சபையும் தீர்மானமொன்றை முன்வைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள போதிலும் நடைமுறையில் அனேகமான தீர்மானங்கள் பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றினாலேயே முன்வைக்கப்படுகின்றன.
பொதுச்சபை
முன்வைக்கும் தீர்மானமொன்று பொதுச்சபையில் ஐநா உறுப்புநாடுகள் அனைத்தின்
முன்னிலையில் வாக்கெடுப்பிற்கு விடப்படுவதுடன், அதனை நிறைவேற்றுவதற்கு சாதாரண
பெரும்பான்மை போதுமானதாக உள்ளது (முக்கியமான தீர்மானங்களுக்கு மூன்றில் இரண்டு
பெரும்பான்மை தேவை).
செயலாளர் நாயகம்
ஐக்கிய நாடுகள்
சபையின் செயலாளர்நாயகம் ஐநா உறுப்பின் பிரதான அங்கமான ஐநா செயலகத்தின் தலைமை
அதிகாரியாகச் செயற்படுகின்றார். செயலாளர்நாயகமே நடைமுறையில் ஐநா சபையின்
பேச்சாளராகவும் அதன் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார். தற்போது
செயலாளர்நாயகமாகப் பணியாற்றுகின்ற பான் கி மூன் அவர்கள் முன்னாள் தென்கொரிய
வெளிநாட்டு அமைச்சராக கடமையாற்றியுள்ளதுடன், 2007 ஜனவரி 1 முதல் அப்பதவியை
வகித்துவருகின்றார். 2011 டிசம்பர் 31 இல் அவரது முதலாவது பதவிக்காலம் நிறைவடைந்த
நிலையில் மீள்நியமனம்பெற்று மீண்டும் அவர் இப்பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐநா சபையை வலுவானதாகவும், தைரியம்மிக்கதாகவும்
மாற்றியமைத்து நம்பிக்கைப் பாலமாகத் திகழச்செய்வதே தனது முதற்பணியென திரு. பான்
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு, சூடான் மற்றும் வடகொரியா ஆகிய
நாடுகளில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதே தனது முதற்பணியென அவர்
தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 35 ஆண்டுகளில் ஐநா செயலாளர்நாயகம் பதவியை
வகிக்கும் முதல் ஆசிய நாட்டவராகவும் அவர் திகழ்கின்றார்.
முகவர்
அமைப்புக்கள்/நிகழ்ச்சித்திட்டங்கள்
முகவர்
அமைப்புக்கள் மற்றும் நிர்வாக சபைகளில் பணியாற்றுகின்ற இலங்கை ஊழியர்கள்.
ஏனைய உறுப்புச்
சபைகள்
பொருளாதார
மற்றும் சமூக சபையின் ஒரு உறுப்பு நாடாக இலங்கை உள்ளது. சுகாதார மற்றும் ஊட்டச்சத்து
அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்றுக்
குழுவின் தலைமை அதிகாரியாக உள்ளார்.
ஐ. நாவில் முக்கிய பதவிகளை வகித்துள்ள இலங்கையர்கள்
காமினி கொரியா அவர்கள் வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தின் (UNCTAD) செயலாளர் நாயகமாக பதவி வகித்துள்ளார்.ஜயந்த தனபால அவர்கள் ஆயுத ஒழிப்பு ஆராய்ச்சிக்கான ஐநா நிலையத்தின் ஆயுத ஒழிப்பு விவகாரங்களுக்கான உயர் பதவிகளை வகித்துள்ளார்.
- சீ.கொரியா அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் உப தலைவர் பதவியை வகித்துள்ளார்.
- ராதிகா குமாரசுவாமி அவர்கள் சிறுவர்கள் மற்றும் ஆயுதப்போராட்ட விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியாக ஐநா செயலாளர்நாயகத்தின் கீழ் பணியாற்றியுள்ளார்.
- பாலித ஹோகன்ன அவர்கள் ஐநா உடன்படிக்கை பிரிவுத் தலைவராகச் செயற்பட்டுள்ளார்.
இலங்கையில்
ஐநாவின் பணிகள்
ஐநாவின் துறைசார் நிபுணத்துவ முகவர் அமைப்புக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை மற்றும் மனிதனால் ஆக்கப்பட்ட அழிவுகளின் போது தொழில்நுட்ப நிபுணத்துவ உதவி, நிதியுதவிகளை வழங்கி இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளன. அபிவிருத்திச் சுட்டெண்களைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை வகித்துவருவதுடன், இலங்கையிலுள்ள ஐநாவின் 16 வதிவிட முகவர் அமைப்புக்கள் உணவுப்பாதுகாப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற குடிமக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிவருகின்றன. அந்த வகையில் இனமோதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர்செய்யும் முகமாக அரசாங்கம்மேற்கொண்டுள்ள சமாதானத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஐநா அமைப்புக்கள் தமது ஆதவை வழங்கிவருகின்றன. இது தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற முயற்சிகளின் கீழ் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்தல், அடிப்படைச் சுதந்திரங்கள், சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் ஐநா சிரேஷ்ட அதிகாரிகள், விசேட பிரதிநிதிகள் மற்றும் கட்டமைப்புக்கள் மூலமாக அரசாங்கத்துடன் வெளிப்படையான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் 1952 ஆம் ஆண்டில் இணைந்து கொண்ட பின்னர் தனது பணியைத் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 14, 1955 அன்று இலங்கை ஐ.நா.வின் உறுப்பு நாடாக அனுமதிக்கப்பட்டது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய நாடுகள் சபை அரசு மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து, அனைத்து இலங்கை மக்களும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இலங்கையில் உள்ள 23 சிறப்பு முகவர் நிலையங்கள், நிதி, திட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலமாகவும், ஐக்கிய நாடுகள் சபை தேவைகளை நிவர்த்தி செய்து, ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
அரசாங்கம், சிவில் சமூகம், பரந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், இருதரப்பு ஒப்பந்ததாரிகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டுறவை வளர்த்துள்ளது. காரணம் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் நீண்ட கால வளர்ச்சியை உருவாக்கி, அந்த நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கவுமே பாடுபட்டு வருகிறது.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையானது தரமான சமூக சேவைகளை வழங்கல், மனித திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் நீண்டகால அமைதிக்கான நல்லிணக்கம், நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு
பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களில் 17 குறிக்கோள்களும்(Goals) அதனுடன் தொடர்புடைய சுமார் 169 இலக்குகளும் (Targets) உள்ளடங்குகின்றன. இவை பேண்தகு அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த இலக்குகள் 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன், அவற்றை வெற்றிபெறுவதற்கான இறுதி இலக்கு 2030 ஆம் வருடமாகும். இது 15 வருட காலப்பகுதியைக் கொண்டதாகும்.
இலங்கையையும் அதில் ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபை சேர்த்து அதனை அடைய, நிலையான அபிவிருத்தி என்னும் இலக்கை இலங்கையில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு இவ் இலக்கின் கீழ் இலங்கையின் கல்வி துறையானது மிகவும் முன்னேற்ற நிலையில் இருப்பதாக நிலைபேண் அபிவிருத்தி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையும் உலக வங்கியும்
இலங்கை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3,852 அமெரிக்க டாலர் (2019) மற்றும் மொத்த மக்கள் தொகை 21.8 மில்லியன். இலங்கையுடனான ஆறு தசாப்தங்களுக்கும் மேலான கூட்டுறவாக, உலக வங்கி அமைப்பு இலங்கையுடன் இணைந்து போட்டியான சூழ்நிலையில் நாட்டினை பல்வேறு அபிவிருத்தி மூலம் மாறுவதற்கு தொடர்ந்து ஆதரிக்கிறது. தொடர்ந்தும் இலங்கையின் அபிவிருத்திக்கான பல்வேறு உதவிகளையும், கடன்களையும் இலங்கைக்கு வழங்கி வருகிறது.
உதாரணம்:
2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவிகளை பெற்றுள்ளன, 2014ஆம் சில அபிவிருத்திக்காக உலக வங்கி (WB) 331.5 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்தது. இந்த நிதி அரசாங்கத்தின் துறை மேம்பாட்டு திட்டம், நீர் பாதுகாப்பு மற்றும் புதிய நகரங்கள் அபிவிருத்தி உள்ளிட்ட நீர்வள திட்டமிடல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்(UNDP)
இலங்கையில், பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் முதலான நிலையான மனித வளர்ச்சியை அடைவதற்கு UNDP 1967 முதல் முக்கிய அபிவிருத்தி பங்காளராக செயல்பட்டு வருகிறது.
இலங்கையின் அரசு, சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் UNDP தீவிர வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் மக்களையும் உலகத்தையும் பாதுகாக்க , ஏற்றத்தாழ்வுகளை இல்லமால் செய்கிறது.
UNDP இலங்கையிலும் அதற்கு அப்பாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் , இலங்கைக்கு காணப்படும் சவால்களுக்கு பொருத்தமான தீர்வுகளை அடையாளம் காணவும் உதவுகிறது.
இலங்கையில் மேற்கொண்டு வரும் சில செயற்திட்டங்கள்:
- GEF VI Tourism Project
- Biodiversity Finance Initiative (BIOFIN) Phase II
- Transforming Tourism in Sri Lanka
- Strengthened Parliament and Commissions (SPC)
- Climate Promise
- Business and Human Rights
- Capacity Development for Local Government
- Peacebuilding and Transitional Justice
- Improved Access to Justice
- Promoting Reconciliation
- Enhanced Local Governance
- GEF Small Grants Programme
- Trilateral cooperation on Renewable Energy in Sri lanka
- Biomass Energy Production
- Energy Generation NAMA
- Climate Change Adaptation
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணை.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பல்வேறு உதவியை வழங்கினாலும், 2009 இறுதி யுத்தத்தின் மூலம் அழிக்கப்பட்ட மக்கள் மற்றும் யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதி தெடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு இலங்கை அரசு 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் Elisabeth Tichy-Fisslberger இனை ஜெனிவா நகரில் சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை ஜெனிவா நகரில் சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
ஜெனீவாவில் எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கடந்த 27ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், இலங்கைவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களால், நான் அச்சமடைந்துள்ளேன். ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுக்க மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வகுத்துள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இலங்கை தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட், வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாங்கள் மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தி வருகிறோம். மேலும் அவர் எழுப்பிய விடயங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம். அந்தவகையில் இவ்விடயங்களில் முறையான பதிலை நாங்கள் நிச்சயம் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில் இலங்கை குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்களின் வழக்குகளைத் தொடர்வதன் ஊடாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இலக்கு தடைகளை விதிப்பதன் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என மிச்சேல் பச்லெட் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில்
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் முரண்பாட்டை உருவாக்கி வருகிறது. இதனால்
சில வேளைகளில் இலங்கைக்கு சகல உதவிகளையும், செயற்பாடுகளையும் நிறுத்த நடவடிக்கை
எடுக்கப்படலாம். பொருளாதார தடை விதிக்க வாய்ப்பும் காணப்படுகின்றது. எவ்வாறாயினும்
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டதானது. அது
முறிவுக்கு உள்ளாகாமல் தொடருமானால் இலங்கைக்கு வாய்ப்புகள் பல உருவாகும்.





Comments
Post a Comment