ஐக்கிய அமெரிக்க சமஸ்டி அரசியலமைப்பு:

ஐக்கிய அமேரிக்க அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்:

1. எழுதப்பட்ட நெகிழா அரசியலமைப்பு:

ஐக்கிய அமேரிக்க அரசியலமைப்பானது சுருக்கமான அரசியலமைப்பாக காணப்படுகின்றது. இது ஒரு முகவுரையையும்  07 அத்தியாயஙங்களையும், 4000
சொற்களையும் கொண்டுள்ளது. 232 வருடங்கள் பழமைமிக்க இவ் அரசியலமைப்பில் இதுவரைக்கும் 27 அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே
போன்று இது நெகிழா யாப்பாகவும் கருதப்படுகின்றது. இதன்படி யாப்பினை திருத்துவது கடினமானதும் சிக்கலானதுமாகும். அரசியலமைப்பிற்கு கொண்டு வரும் எந்தவொரு
திருத்தத்திற்கும் மாநில அரசுகளின் ¾ பெரும்பான்மை அவசியமாகும்.

2. சமஷ்டி அரசியலமைப்பு:

அமரிக்காவின் பல்வகைமையின் ஊடாக சுயாதீனத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சியின் விளைவாக 13 சுதந்திரமான அரசுகள் ஒன்றிணைந்து உலகிற்களித்த கொடையே அமேரிக்க அரசியல் யாப்பாகும். இது 13 அரசுகளில் ஆரம்பித்து தற்போது 50 மாநிலங்கள் வரை பரந்துள்ளது.

3. வலுவேறாக்கம் மற்றும் தடைகள் சமன்பாடுகள் கொண்ட யாப்பு:

அமேரிக்க அரசியலமைப்பு
வலுவேறாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு சட்டத்துறை நிர்வாகத்துறை, நீதித்துறை
என்பன தனித்தனித்துறைகளாக இயங்கி வருகின்றன. அதேபோன்று தடைகள் சமன்பாடுகள் தத்துவமும் இவ்யாப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு துறை ஏனைய துறையின் மீது அநாவசியமாக தலையிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொடுரமான தான்றௌன்றித்தனமான ஆட்சி
ஏற்படுவதனை தடுப்பதே இவ் தடைகள் சமன்பாடுகள் தத்துவத்தின் நோக்கமாகும்.

4. மரபுகள், வழக்காறுகள், சம்பிர்தாயங்களை கொண்ட யாப்பு:

அமேரிக்க அரசியலமைப்பானது
சுருங்கிய ஒன்றாகும். இதன் மூலம் அரசாங்கமைப்பின் புறவமைப்பு காட்டப்பட்டுள்ளது. இந்த
புறவமைப்பிற்குரிய எழும்பு, தசை, நரம்பு என்பன மரபுகள், வழக்காறுகள், சம்பிரதாயங்களிலிருந்து
பெறப்பட்டுள்ளன.

5. நீதிப்புணராய்வு அதிகாரம் கொண்ட யாப்பு:

அரசியலமைப்பினை பொருள்கோடல் செய்வதன் ஊடாக காங்கிரஸ் நிறைவேற்றும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு உகந்ததா என்பதை மீளாய்வு செய்யும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் பெற்றுள்ளன. எனினும் இவ்வதிகாரத்தை அரசியலமைப்பின் ஊடாக நீதிமன்றத்திற்கு நேரடியாக பெற்றுக் கொடுக்காவிடினும் அவ்வதிகாரம் மறைமுகமாக நீதிமன்றத்திற்கு உண்டு என்பதை 1803 ம் ஆண்டு மார்பரி எதிர் மெடிசின் வழக்கு தீர்மானித்தது.

6. மக்கள் இறைமை தத்துவத்தை கொண்ட யாப்பு:

அமேரிக்க அரசியலமைப்பானது மக்கள்
இறைமை எனும் தத்துவத்தின் அடிப்படையில் அமையப்பெற்றுள்ளது. ஆட்சி செய்யும் அதிகாரம் மக்களிடம் காணப்படுகின்றது என்பதே இதன் கருத்தாகும்.

7. குடியரசு யாப்பு:

அமேரிக்க ஒரு குடியரசாகும். இதன் தலைவர் ஜனாதிபதியாவார். இவர் மக்களால் நேரடியாகவன்றி தேர்வாளர் கழகத்தினூடாக தெரிவு செய்யப்படுகின்றார். தேர்வாளர் கழக உறுப்பினர்கள் 538 பேறும் மக்கள் தேர்தல் மூலமே தெரிவாகின்றனர். அமெரிக்க அரசியலமைப்பானது மக்களிடமே இருந்து அதிகாரத்தை பெறுகின்றது. மேலும் அனைத்து அரசுகளும் தமது அரசியல் யாப்பினை குடியரசு தத்துவத்திற்கேற்ப ஒழுங்கமைத்துள்ளன.

8. ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்ட யாப்பு:

அமேரிக்க அரசியலமைப்பு ஜனாதிபதி ஆட்சிமுறை தத்துவத்தினை கொண்டுள்ளது. இதன்படி நிறைவேற்றுத்துறைக்கு பொறுப்பாக ஜனாதிபதியும் மற்றும் அவர்களது ஆலோசகர்களுமான கபினட் செயலாளர்களும் காணப்படுகின்றனர். ஜனாதிபதிற்கு அதிகாரங்கள் அரசியலமைப்பு மூலமும், உயர்நீதிமன்றத்தீர்ப்பின் மூலமும், காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட யோசனைகள் மூலமும் கிடைக்கின்றன.

9. இரட்டைக் குடியுரிமை:

அமெரிக்க அரசியலமைப்பு இரட்டைக் குடியுரிமையினை அங்கீகரித்துள்ளது. இதன்படி நாட்டுக்குடியுரிமையும் அரசின் குடியுரிமையும் ஒருவருக்கு இருப்பது இரட்டைக் குடியுரிமையாகும். அமேரிக்க பிரஜை ஒருவர் ஐக்கிய அமேரிக்காவினதும் தான் வாழும் பிரசேத்தினதும் பிரஜையாகவும் உள்ளார்.

10. உரிமைகள் சாசனம்:

அடிப்படை உரிமைகள், சொத்துக்கள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும்
பொருட்டு இது உள்ளடக்கப்பட்டுள்ளது.



S. Vithurshan, 

Special in political science(R), 

University of Peradeniya 

Comments

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931