மனித உரிமைகளை பாதுகாத்து பலப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கும் சவால்கள்

 


அறிமுகம்

சர்வதேச அமைப்பு அல்லது பன்னாட்டு அமைப்பு  என்பது பன்னாட்டு உறுப்பினர்களைக் கொண்டு ஒரு நல்ல நோக்கத்திற்காகவும், எந்த ஒரு செயலிலும் தன்னை முன்னிலைப்படுத்தியும் உலக மக்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். நாடுகள் சில சேர்ந்தோ அல்லது பொதுக் குறிக்கோளின் அடிப்படையிலோ சர்வதேச அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. அதாவது சமூகத்தில் வாழும் மக்கள் பிறரின் உதவியின்றித் தமது செயற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்யமுடியாது. இவ்வாறே சமகால உலக அரங்கிலும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் உதவியின்றி தங்கியிருப்பது தவிர்க்க முடியாதுள்ளது. உலகில் இவ்வாறு பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது. அது அண்மையில் 75வது ஆண்டு உருவாக்க வரலாற்றை கடந்த வருடம் கொண்டாடியது. உலக சமாதானத்தையும் உலக நாடுகளின் பாதுகாப்பையும் அத்தோடு அந்நாடுகளிடையே ஏற்படுகின்ற தகராறுகளையூம், பேரழிவுகளை ஏற்படுத்தவல்ல யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குமாக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பே ஐக்கிய நாடுகள் சபையாகும். 

'ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்" என்பது......


1945ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற யூத்தத்தில் அணு ஆயுதங்கள் பாவனைக்கு கொண்டுவரப்பட்டதால் உலகுக்கு ஏற்பட்ட அழிவு மதிப்பிடப்பட முடியாத அளவு பாரியதாக அமைந்திருந்தது. இந்நிலைமையினால், எதிர்கால உலகின் நிலைபாட்டை தீர்மானிப்பதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவென மூன்று துறைகள் இனங்காணப்பட்டன. அதாவது, உலக சமாதானத்தை நிலைநாட்டுதல் (மூன்றாம் உலக யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுத்தல்), உலகப் பொருளாதார அபிவிருத்திக்காக சிறந்த செயற்திட்டமொன்றை ஏற்படுத்தல், மனித உரிமைகளை பாதுகாக்கும் கட்டமைப்பொன்றை இனங்காணல் போன்ற குறிக்கோள்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு சக்திவாய்ந்த சர்வதேச அமைப்பொன்று உருவாக்கப்படுவது அவசியம் என உலகத் தலைவர்கள் உணர்ந்தார்கள். அதன் பயனாக 'ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்' என்ற பெயரில் 1945ஆம் ஆண்டு புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டது.  ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாப்பின் 55 (சி) உறுப்புரையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு சகல நாட்டு அரசினாலும் அதன் ஆட்சிக்குட்பட்ட எல்லையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கொள்கையளவிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

ஐக்கிய நாடுகள், அல்லது ஐ.நா என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல் கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச் சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடியது. இதையொத்த தேசங்களின் அணி என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும்  என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி 192 உறுப்புநாடுகள் இருந்தன. ஜுலை 9 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.

மனித உரிமைகளை பாதுகாத்து பலப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கும் சவால்கள்


ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பின்னடைவுக்கு காரணமாக இருப்பது பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், இத்தீர்மானத்தை நிரந்தர அங்கத்துவ நாடுகள் நிராகரிக்கும் பட்சத்தில் தீர்மானம் செயலற்றுப்போகும். இத்தனியுரிமை அதிகாரம் இவ் நிரந்தர நாடுகளுக்கு இருப்பதனால் இவை சுயநலப்போக்குடன் ஒரு நியாயமான தீர்மானமானாலும் எதிர்க்கின்றனர். மேலும் இச்சபையில் மேற்கத்தேய நாடுகள் ஒரு பக்கமும் ரஸ்யாவும், சீனாவும் மற்றுமொரு பக்கமுமாக முரண்பட்டு செயற்படும் போக்கு உள்ளது. இச்சிக்கலுக்கு மத்தியில் இச்சபையின் உருவாக்க நோக்கம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

பாதுகாப்பு சபையினை விட மற்றைய சபையினால் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. உதாரணமாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதிலும் இலங்கையரசு சீனாவினை பக்கபலமாக கொண்டு தீர்மானங்களை உதாசீனப்படுத்தும் போக்கு உள்ளது. அதாவது எந்த செயற்பாட்டு தாக்கத்தினையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஐ.நா மேற்கொள்ள வேண்டுமாயின் பாதுகாப்பு சபையின் அனுமதியினை பெறவேண்டும், பாதுகாப்பு சபையில் இலங்கையை காக்க சீனா, ரஸ்யா போன்ற வீற்ரோ அதிகாரம்பெற்ற நாடுகள் காணப்படுகின்றது. மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த நாட்டின் மீது குறைந்தபட்ச அழுத்ததினை மாத்திரமே பிரயோகிக்க முடியும். இஸ்ரவேலுக்கு எதிராக பல கண்டன தீர்மானங்கள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியிருப்பினும் நடைமுறை பலன் எதுவும் அடையப்படவில்லை.

வல்லரசுகளின் செல்வாக்கு ஐ.நா சபையில் காணப்படுவதும் இதன் சுதந்திர செயற்பாட்டிக்கு இடையூராகவே உள்ளது. வல்லரசுகள் தமக்கு ஏற்ற வகையில் ஐ.நா சபையினை பயன்படுத்துகின்றன. அரசியல் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டு பல சிறிய நாடுகளை வல்லரசுகள் ஆட்டிப்படைக்கின்றன. சீனாவின் ஊடுருவலினை தடுப்பதற்காகவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை அமெரிக்க மனித உரிமைப்பேரவையில் கொண்டுவந்தது. மத்திய கிழக்கு நாடுகளினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே இஸ்ரவேலினை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாக்கின்றது. ஒரு நாட்டு அரசு தமது கொள்கைக்கு முரணாக செயற்படும்போது அரச எதிர்ப்பாளர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து யூத்தத்தினை தூண்டி அதற்கு ஐ.நா சபையின் அனுமதியினையும் வல்லரசுகள் பெற்றுவிடுகின்றன. லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்தப்போக்கினை அவதானிக்கலாம்.

இன்று பயங்கரவாதம் என்பது உலகை அச்சுறுத்தும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது என்பதை சர்வதேச அமைப்புக்களிலும் ,பிராந்திய அமைப்புக்களிலும், தேசிய அரசாங்க பாராளுமன்றங்களிலும் விவாதிப்பதிலிருந்து பயங்கரவாதம் எவ்வளவு தூரம் மானுட இருப்பை அச்சுறுத்துகின்றது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஐ.நா. சபை பயங்கரவாதத்தை உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருட்டு ஐ.நா. சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இத் தீர்மானங்கள் அங்கத்துவ நாடுகள் எவ்வாறு தத்தமது நாடுகளில் தனியாகவும் வேறுநாடுகளுடன் கூட்டாகவும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமென வழிகாட்டுகின்றன.

அதாவது மனித உரிமை தொடர்பான சட்டங்களை உருவாக்கினாலும் அதை நடைமுறை செய்வதற்கான வாய்ய்பு மிக மிக குறைவாக உள்ளது. எந்த ஒரு நாட்டுக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்கி மனித உரிமை மீறலை இல்லாமல் செய்ய முயற்சி செய்ய முடிந்தாலும் அது முழுமையாக வெற்றி அளிப்பதில்லை. அந்த சுழலோ, அல்லது நாடுகளின் அமைப்பிலோ தாக்கம் செலுத்துவதால் 193 நாடுகளின் மனித உரிமை சட்டத்தை ஏற்றுக் கொள்வதிலே சட்ட சிக்கல் காணப்படுகிறது. இதனால் மனித உரிமைகளை மீறாது என்றும் சொல்ல முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளின் பெயரும் மனித உரிமையை பாதுகாக்கும் பிரகடனத்தில் இல்லை. நாடு உறுப்புரிமை பெற்றாலும் அவை உரிமை பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல் ஆனது ஐக்கிய நாடுகள் சபைக்கு பாரிய சிக்கலாக உள்ளது.

"தொடர்ச்சியான மனித உரிமைகளின் மீறல்கள் மற்றும் ஒரு அதிகரித்த அளவிற்கு சர்வாதிகாரத் திசையை நோக்கி அரசாங்கம் நகர்கின்றமைக்கான அறிகுறிகள் தென்பட்டதாக" கோபி அனான் அவர்கள் கூறினார். இது மனித உரிமை தொடர்பான பாதுகாப்பிற்கு பெரும் தடையாக உள்ளதாக ஒரு கட்டத்தில் இவர் கூறினார். அவர் கூறியதன்படி இன்று மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பாரிய தாக்கம் செலுத்தும் காரணிகளை அவர் குறிப்பிட்டார். அவையாவன, 

1.வறுமைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் 

2.உலகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அப்பாகுபாடுகள் ஏற்படுத்தும் பாரிய விளைவுகள் 

3.ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகள் 

4.குற்றவாளிக்கான தண்டனை முறைகள் மற்றும் தண்டனைகள் 

5.ஜனநாயக ரீதியில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் ஜனநாயக தன்மை குறைந்து போதல், மாறுபாடுகள் 

6.பலவீனமான அரசு நிறுவனங்கள் 

இன்று மனித உரிமைகளை பாதுகாப்பதில் உள்ள சவாலாக ஐக்கிய நாடுகள் சபை 5 இணை இனங்கண்டுள்ளது. இதனை 2030 நிலைத்து நிற்கும் சமாதானம் மற்றும் உரிமை அறிக்கை அன்டோனியோ குத்ரசு அவர்களால் 2017இல் வெளியிடப்பட்டது. அவையாவன:


1.புவிசார் அரசியல் ஆக்கிரமிப்பு மற்றும் ஊடுருவல்:

வெளிநாடுகளில் போரை நடத்தும் பிரதிநிதிகளுக்கு ஆதரவு உள்ளதால் உலகளாவிய ஆதிக்கம் மற்றும் பிராந்திய சக்திக்கும் இடையில் கடுமையான போட்டியில் மோதல்கள் உருவாகின்றன. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு பாரிய சவாலை உருவாக்குகிறது. உதாரணமாக சிரியா மற்றும் ஏமனில் இடம்பெற்ற போரினை கூறலாம்.

2.பயங்கரவாத எதிர்ப்பு போராட்டங்களை மற்றும் மோதல்களை மறுபரிசீலனை செய்தல்: இப்போக்கு அமைதியை கட்டியெழுப்ப தேவையான இடத்தில மோதலை உருவாக்குகிறது. சிரியா, துருக்கி, எகிப்து போன்ற இடங்களில் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகள் பயங்கரவாத எதிர்ப்பு என்ற சாக்குப்போக்கை பயன்படுத்தும் போது அதை குறைப்பதை விட வன்முறை மோதலை அதிகரிக்கிறது. இதனால் மனித உரிமைகளை பாதுக்காக்க முடியாமல் அது மீறப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு பாரிய சவாலாக உள்ளது. 

3. இராணுவ தலையீடு: பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் பொதுமக்களை காக்கவும் அல்லது மோசமான ஆட்சியாளர்களை அகற்றவும் இது தலையீடு செய்கிறது. ஒரு வேளை இராணுவத் தலையீடும் ஆட்சி இமாற்றமும் நீடித்த ஸ்திர தன்மையும் கொண்டு வரவோ அல்லது அடிப்படைவாத குழுக்களை தோற்கடிக்கவோ அல்லது தவறினால் அது ஆழ்ந்த ஆபத்தை உருவாக்கும். உதாரணமாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இ மற்றும் 1988 இல் மாலைதீவில் இராணுவ ஆட்சி உருவானபோது பாரிய அளவிலான மனித உரிமைகள் மீறல்கள் உருவாகின. இது மனித உரிமைகளை பாதுகாக்க முனையும் போது இராணுவ ஆட்சியால் கொன்று குவிக்கபடுகின்றனர். இது ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கு பாரிய சவாலாக உள்ளது எனலாம். 

4. கட்டாயமாக்கப்பட்ட இடப்பெயர்ச்சி

மக்கள் கட்டாயமாக வெளியேற்றபடுவதனால் மக்கள் உரிமைகள் பலவற்றை இழந்து நாடின்றி வசதி இன்றி உள்ளனர். இதனால் பிற நாடுகள் தனது எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தி தனது எல்லையை மூடி விடுகின்றனர். இதனால் மக்கள் பல மனித உரிமை மீறலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் தஞ்சம் ம் அடைந்த பாகிஸ்தானிய மக்கள் ஏப்ரல் மதம் நடந்த ஈஸ்ட்டர் குண்டு தாக்குதலில் சிங்கள மக்கள் பயந்து வீடு இன்றி துரத்தி விடப்பட்டு இன்று வசதி பல இன்றி வவுனியா பகுதி மக்களுடன் உள்ளனர்.  இது பாரிய பிரச்சனையாக ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது. அதே போல் அவுஸ்திரேலியா வரும் மக்களை அந்நாட்டு அரசாங்கம் திருப்பி அனுப்பும் தன்மை அதிகமாக உள்ளது. இது இன்று ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கு மனித உரிமையை பாதுகாக்க பாரிய சவாலாக உள்ளது. அதேபோல் ரோகின்ய முஸ்லிம் மியன்மாரில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடலாம். 


5. மனிதாபிமானத்துக்கான போராட்டம்: 

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போதிய ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்கிறது. அதனால் மனிதாபிமான விழுமியங்களை பாதுகாப்பதில், நெருக்கடியின் பொது அதனை தடுக்க போதுமான முயற்சிகள் இடம்பெறுவதில்லை. அதேபோல் மனிதாபிமான உதவியை வழங்குவோர் மீது குண்டு வீசுதல் யுத்தம் செய்தல் மூலமும் எல்லா செயற்பாடும் அழிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு பாரிய சவாலாக உள்ளது. உதாரணமாக 2009இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது செய்த பாரிய மனிதாபிமான உதவிகள் யாவும் முடக்கப்பட்டன. அண்மையில் அமேரிக்காவில் கறுப்பின பிரஜைகள் இருவர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டம் வெடித்தது. 


இன்று மனித உரிமை மீறல் தொடர்பில் ஜக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கிய சவால்கள்

இன்று மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சனையில் குழந்தையை கொல்லுதல் பாரிய பிரச்சனை சிறுவர் உரிமையை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அதிக முயற்சி செய்தாலும் யுத்தத்தில் அதிகளவான மக்களில் சிறுவர்களே 20 சதவீத அளவு கொல்லப்படுகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை நிறுத்த முயற்சி செய்தாலும் அதனை முழுமையாக நிறுத்துதல் கடும் கஷ்டமாக உள்ளமை பாரிய சவாலாக உள்ளது. இன்று உலகத்திலே உள்நாட்டு யுத்தத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனால் மனித இனம் இன்னும் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்த வண்ணமே உள்ளனர். இதனால் அவர்கள்  பல இன்னல்களை அனுபவிக்கின்றனர். வாழ முடியாத நிலையில் நாடுகளின் எல்லையில் பலத்த பாதுகாப்பில் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். உதாரணமாக சிரிய மக்கள், ரோகின்ய முஸ்லீம்கள், அதே போல் யூத்தத்தால் இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு சென்றும் நடு கடலில் விடப்படல், ஆள் கடத்தல் செயற்பாடு என்பன ஐக்கிய நாடுகள் சபைக்கு பாரிய சவாலாக உள்ளது. உதாரணமாக சோமாலிய நாட்டு ஆள் கடத்தல்கார்கள் மக்களை, குழந்தைகளை கடத்தல் மற்றும் துன்புறுத்தல் வீதம் அதிகரித்து வருவது பாரிய சவாலாக ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது. 

அதேபோல் இன்று இனவாதம், நிறவாதம், பாகுபாட்டு கொள்கை காரணமாக பல நாட்டு மக்கள் கொல்லப்படல் பாரிய பிரச்சனையாக உள்ளது. அமெரிக்கா மற்றும் கருப்பு ஆபிரிக்க குடி மக்களினிடையே பாரிய முரண்பாடு உருவாகி இருந்தாலும் அதனை தீர்த்து எல்லா நேரத்திலும் உதவ முன் வராமை பாரிய சிக்கலாக உள்ளது. இன்று ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அமெரிக்கா இருப்பதால் பல மனித உரிமை மீறலுக்கு ஆதரவு வழங்கி வருவது மனித உரிமையை பாதுகாக்க பாரிய சிக்கலை உருவாக்குகிறது என்று ஏனைய நாடுகள் கூறுகின்றன. இத்தனை வருடங்கள் ஆகியதால் அதன் செயற்பாடு மங்கி செல்வதும் மனித உரிமைகளுக்கு பாரிய சவாலாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபை உறுப்புரிமை நாடுகள் வட்டாரத்தில் பேசுவதை நாம் அறியலாம். 

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் ஜக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கிய சவால்கள்

இலங்கையின் இனமோதல் இலங்கைக்கேயுரிய தனித்துவத்தினைக் கொண்டதாகும். யுத்தம் நிகழும் போது சில எண்ணிக்கையிலான பொது மக்கள் மரணிப்பது தவிர்க்க முடியாது. எனவே ஏனைய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையீடு செய்வது அவசியமற்றது என மேற்குத் தேச வல்லரசுகள் கருதியிருந்தன. மறுபக்கத்தில் இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பொது மக்கள் பாதுகாப்பு, சமாதானம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புறக்கணிக்க முடியாத எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.பதிலாக பாதுகாப்புச் சபையிலுள்ள ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளின் கைப்பொம்மையாகவே ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்டது.

ஆயினும் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை தொடர்பாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட இரகசியங்களில் சில ஐக்கிய நாடுகள் சபை அங்கத்தவர்களும், பொதுச்செயலாளரும் உறுதியான சில செயற்பாடுகளைச் செய்திருந்ததாக கூறியுள்ளது. இதனடிப்படையில் பார்க்கின்ற போது பான்- கீ- மூனின் தலைமைத்துவம் வன்னியில் நடந்த மனிதாபிமான தகராறுகளை எதிர்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.இன்று ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்தை கட்டி எழுப்புவதில் 2009க்கு முன்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டது.ஐநாவின் துறைசார் நிபுணத்துவ முகவர் அமைப்புக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை மற்றும் மனிதனால் ஆக்கப்பட்ட அழிவுகளின் போது தொழில்நுட்ப நிபுணத்துவ உதவி, நிதியுதவிகளை வழங்கி இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளன. 

அபிவிருத்திச் சுட்டெண்களைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை வகித்துவருவதுடன், இலங்கையிலுள்ள ஐநாவின் 16 வதிவிட முகவர் அமைப்புக்கள் உணவுப்பாதுகாப்பு, விவசாயம்,கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்  போன்ற குடிமக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.  அந்த வகையில் இன மோதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர்செய்யும் முகமாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமாதானத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஐ. நா அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கிவருகின்றன. 

இன்று மனித உரிமை மீறல் தொடர்பில் ஜக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கிய சவால்களை இழிவளவாக்கும் முயற்சிகள்

மனித உரிமையால் ஏற்படும் பாதிப்பினை குறைப்பதிற்கு ஐக்கிய நாடுகள் 6 பரிந்துரைகளை முன்வைத்தன. அவை மூலம் மனித உரிமை மீறல்களை இழிவாளவாக்கும் நடவடிக்கை பல எடுக்கப்பட்டன. 

1. மோதல் மற்றும் புவிசார் அரசியலுக்குள் அமைதியை உருவாக்கல்: 

யேமன், சிரியா விடயத்தில் மட்டுமல்லாமல் சண்டை இடுவோருக்கு பின்னால் நாடும் கட்சிகளும் அவற்றுக்கு இடையிலான உறவுகளை சரி செய்து மோதல்களை மத்தியஸ்தம் செய்வதன் மூலம் ஏற்படும் மோதல்களை தவிர்த்து உரிமையை பேண முயற்சி செய்கிறது.

2. ஆயுதங்களை குறைத்தல்: 

அதாவது ஆயுத பரிகரணம் செய்வதன் மூலம் அதிகார சமநிலை, சர்வதேச சட்டம் பேணல் முதலான முறைகள் வாயிலாக மனித உரிமைகளை பாதுகாத்து பலப்படுத்துகின்றன. இதை விட வறுமை குறைப்பு, உள்நாட்டு சட்டங்களை முறையாக பேணல் என்பவற்றின் மூலமாக சமாதானத்தை கட்டி எழுப்பி மனித உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதுடன் ஏற்படும் சவாலை குறைக்க பாரிய பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதே போல சில பொறிமுறைகள் ஊடாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக மனித உரிமைகள் கவுன்சிலினை குறிப்பிடலாம். 

இன்று அனைத்து வடிவிலான இனப் பாகுபாடுகளையும் இல்லாதொழிக்கும் சர்வதேச உடன்படிக்கை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை, சிவில் மற்றும் அரசியல் உரிமை, ஆயுத மோதலில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை, சிறுவர்களை விற்றல், சிறுவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்தல் மற்றும் சிறுவர்களின் நிர்வாணப் பகைப்படங்களை வெளியிடுதல் ஆகியவற்றிற்கு எதிராக சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை, புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை, அங்கவீனர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை என பல்வேறு உடன்படிக்கை செய்து பல நாடுகள் கையொப்பம் இட்டு இன்றுவரை ஒவ்வொரு அரசுகளும் ஏற்றுக் கொண்டு மனித உரிமைகள் தொடர்பில் உருவாகும் சவால்களை குறைக்க பல முயற்சி செய்துள்ளது. இதனால் மனித உரிமை மீறலை தாபனங்கள் வாயிலாக இது கையாள்கிறது.

முடிவுரை

எனவே இரண்டு மகாயுத்தங்களை பூலோகம் கண்டது. இவை மனித குலத்தின் சிதைவுக்கும் நாகரிக வீழ்ச்சிக்கும் காரணமாயின. பொதுவாக நாம் எமது அன்றாட விவாதங்களில், அரசியல் தொடர் பான விடயங்களில் தான் கூடுதலான அக்கறையை வெளிப்படுத்தி ஐ.நா.வின் சாதனைகளை நிறைபோட்டுக் பார்க்கும் போது உலகின் பல தளங்களில் நடந்த, நடைபெறுகின்ற இராணுவ மோதல்கள் பற்றியும் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் அவற்றை தடுப்பதில் ஐ.நா. சபை தவறி விட்டது என்று விமர்சனங்களை முன்வைக்கும் பண்பு பொதுவாக காணப்படுகின்றது. அதே நேரம் எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மூன்றாம் உலக யுத்தம் இன்று வரை தோற்றுவிக்கப்படவில்லை என்பதும் சமூக, விஞ்ஞான, அறிவியல் சார்ந்த அடைவுகள் ஐ.நா. சபையின் குறிப்பிடத்தக்க பெறுகைகள் ஆகும். ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றினால் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மேலும் காத்திரமாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையை பொருத்தமட்டும் இன்றுவரை மனித உரிமை மீறல்களை இல்லாமல் செய்து அதன் மூலம் எதிர்கொள்ளும் சவால்களை இழிவளவாக்கும் பங்கினை செய்ததுடன் மனித உரிமை மீறல் தொடர்பான பல சவால்கள் இன்றுவரை பல நாடுகளில் பல இடங்களில் இடம்பெற்று கொண்டுதான் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

References:

The Sustainable Development Goals Report – UNSD, Accessed:

https://unstats.un.org/sdgs/report/2019/The-Sustainable-Development-Goals-Report-2019.pdf

Exammaster, If;fpa ehLfs; rig ( United Nations Organizations)

Accessed: http://exammaster.co.in/united-nations-organizations/ ,July 6, 2017

Report- United nations milleniam development Goals-1990

New challenges for the UN human rights machinery : what future for the UN treaty body system and the Human Rights Council procedures? (2018) M. Cherif Bassiouni and William Schabas.

The Sustainable Development Goals Report – UNSD, Accessed:  https://unstats.un.org/sdgs/report/2019/The-Sustainable-Development-Goals-Report-2019.pdf 

Hans Ingvar Roth ,P. C. Chang and the Universal Declaration of Human Rights(2018)


தொகுப்பு:

சி. விதுர்ஷன்,

அரசியல் விஞ்ஞானத்துறை (R),

பேராதனைப் பல்கலைக்கழகம்



Comments

  1. அருமையான கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931