இலங்கையில் ஊழலற்ற கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதில் தகவல் உரிமை சட்டத்தின் வகிபங்கு
அறிமுகம்
அரசின் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும்,தரவுகளை பெற்று மக்களுக்கு வழங்கவும் உருவான ஒரு ஜனநாயக அம்சமே தகவல் உரிமைச் சட்டமாகும். தகவல் உரிமை என்பது அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை பெற்றுக் கொள்ள உருவான ஒரு அமைப்பாகும். இது சுமார் 128 நாடுகளில் காணப்படுவதோடு(2019 படி) முதலாவதாக ஆப்கானிஸ்தானும் இறுதியாக பலாவு என்ற நாடும் காணப்படுவதாக" Centre for law and democracy" என்னும் அமைப்பானது கூறுகிறது. இங்கு ஊழலற்ற கலாசாரம் என்பது ஒரு நாட்டினுள் மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் பல்வகையான பண ஊழல், அதிகார ஊழல் என்பவற்றை களைந்து நல்லாட்சியை கொண்டு வந்து ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகும். சர்வதேச தகவல் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மதம் 28 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. உலகின் 80 சதவீத நாடுகள் இதனை பயன்படுத்தி ஊழல் அற்ற கலாசாரத்தை உருவாக்கி வருகின்றன.
தகவல் உரிமைச் சட்டம் ஓர் அறிமுகம்
ஒருநாட்டின் ஜனநாயகத்தை அளவிடும் பிரதான கருவியாக தகவல் உரிமைச் சட்டம் காணப்படுகிறது. இச் சட்டமானது தகவலின் வெளிப்படை தன்மையை வெளிப்படுத்துவதோடு சகலருக்கும் தகவல்களை அறிய உதவும் ஒன்றாகும். இதன் மூலம் ஜனநாயக தன்மையை அளவிட முடிவதுடன் ஊழல் அற்ற கலாசாரத்தை உருவாக்குவதில் பாரிய பங்கினை ஆற்றுகிறது.ஒருநாட்டின் அபிவிருத்திக்கு உதவுவது வெளிப்படை தன்மை ஆகும். அதனை தகவல் உரிமைச் சட்டமானது ஈடு செய்கிறது. தகவல் என்பது பேணி வைப்பது மட்டுமல்ல. ஜனநாயக ஆட்சிக்கு வெளிப்படையையும் தரும் ஒன்றாகும். தகவல் உரிமைச் சட்டமானது பிரஜைகளுக்கு நன்மையை தரும் ஒன்றாகும்.
தகவல் என்பது பதிவுகள், ஆவணங்கள், குறிப்புக்கள், அறிக்கைகள், ஊடக அறிக்கை, கட்டளை மற்றும் ஒப்பந்தம் போன்றன அடங்கும். அதேபோல இராஜதந்திரம், வரி விடயங்கள், நாணயமாற்று விடயம், பாதுகாப்பு சார் தகவல்கள் வியாபாரம் போன்ற விடயங்களை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவ் சட்டங்கள் கூறுகின்றன. இதுவும் ஊழலுக்கு வழி செய்யும் என்று அரசியல் விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்படுகிறது. அந்த வகையில் 2016ஆம் ஆண்டின் 12வது இலக்க தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் தகவல் உரிமை ஆணைக்குழு உருவானது. இதன் மூலமாகவே இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்கள் என்பன குறைந்து வருவதை காணலாம். இது குற்றம் இளைக்கும் உத்தியோகத்தர்களுக்கும், ஒழுக்காற்று நடவடிக்கையில் சிபாரிசு செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒன்றாகும்.
5 வருட பதவி காலத்துக்கு ஒரு தலைவரையும் 4 அங்கத்தவரையும் கொண்டு உருவானதாகும். இது தகவல் அறியும் உரிமையை இலங்கை பிரஜைகள் வினைத்திறனுடன் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது. இவ் ஆணைக்குழுவின் செயற்பாடு காரணமாக தகவல் உரிமைச் சட்டம் பேணப்படுவதுடன், சுயாதீன தன்மையை வழங்குவதுடன் ஊழலை குறைப்பதாகவும் உள்ளது. இவ் தகவல் உரிமை சட்டம் மூலம் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பின்வருமாறு பார்க்கலாம். உதாரணமாக
அமலன் எதிர் மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு
ஊழலற்ற கலாசாரம் அறிமுகம்
ஊழல் அற்ற கலாசாரம் என்பது ஒரு முறைமையில் ஒருவருக்கு வழங்கிய அதிகாரத்தையோ அல்லது பதவியையோ தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட பலன்களை பெற்றுக்கொள்ளும் தன்மை இல்லாமல்போய் உருவாகும் ஒரு தூய்மையான நிலையான சமூகம் ஆகும். ஊழல் அற்ற கலாசாரம் வேண்டும் என்றால் பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். அதுதான் அடிப்படை. பொதுமக்கள் ஊழலுக்கு எதிரானதாக அல்லது ஊழலை ஏற்றுக்கொள்ளாததாக இருந்தால் ஊழல் புரிபவர்கள் அரசு அலுவலுக்கும் வரமாட்டார்கள்.
எனவே ஊழல் அற்ற தேசம் வேண்டும் என்றால் பொதுமக்களின் மனப்பான்மையை மாற்ற என்ன நடவடிக்கை செய்ய வேண்டும்? என்பதை அறிந்து செய்ய வேண்டும். தனி ஒருவர் அல்லது பலர் நின்று தட்டிக் கேட்கும் போதே ஊழல் குறையும்.
இன்று ஊழல் அற்ற கலாசாரம் பரவலாக பேசப்படும் ஓர் எண்ணக்கருவாகும். இது பற்றி Transparency International தனது அறிக்கையில் ஊழல் என்பதை வரைவிலக்கணம் செய்வதில் சிறந்ததாக உள்ளது. அது தனது 2010 அறிக்கையில் "கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள்தான் அதிகமாக ஊழலினால் பாதிக்கப்படுகின்றனர் என்ற ஆய்வு கூறுகிறது. 2005-2016 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் அதிகமான ஊழல் இடம்பெற்றதாக ஆய்வு தகவல் ஓன்று கூறுகிறது. சட்டவிரோதமாக ஒருவர் பணம் வைத்திருந்தாலோ அல்லது சட்ட ரீதியாக பணம் வைத்து இருந்தாலும் அதனை வருமான வரி கணக்கில் காட்ட வேண்டும். வரிகள் கட்டாமலோ இருப்பது இரண்டாவது வழிமுறை ஆகும். இது ஊழல் என்று உலக நாடுகளில் கூறப்படுகிறது. இதன் மூலம் கலாசாரம் என்பதன் மூலம் விளங்கிக் கொள்வது யாதெனில் தனிநபரின் அல்லது மக்களின் சமுக நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்குகள் என்பனவாகும். இவ்வாறான கலாசாரத்தில் ஊழலினை இல்லாமல் செய்ய வேண்டும். அரசியல் முறைமையில் வெளிப்படை தன்மை, பொறுப்பு கூறல், கணக்கு காட்டல் என்பவற்றின் ஊடாக உருவாகும் ஒரு தூய்மையான சமூகம் ஊழல் அற்ற கலாசாரம் என்ற நிலையை உருவாக்கும்.
ஆகவே அதற்கு சட்டம் உறுதியானதாக இருக்க வேண்டும். அந்தவகையில் இலங்கையின் ஊழலுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு நிறுவி உள்ளதுடன் தகவல் உரிமை சட்டமும் ஊழலை குறைக்க நடவடிக்கையை தினமும் எடுத்து கொண்டுதான் இருக்கின்றன. இது ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் உருவான ஆரம்ப அமைப்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு காணப்படுகிறது. இது 1975ஆம் ஆண்டு 1ஆம் இலக்க சட்டத்தின் மூலம் உருவானது. மேலும் இது 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மதம் 15ஆம் திகதி தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது. இது ஊழல் தொடர்பில் புலனாய்வு செய்து தகவல் உரிமை சட்டம் தொடர்பில் பாரிய பங்கினை ஆற்றுகிறது. உதாரணமாக பின்வரும் வழக்குகளுக்கு உதவி செய்துள்ளது. உதாரணமாக,
இலஞ்சம் பெற்ற குற்றசாட்டுகள் தொடர்பில் மாத்தளை மாவட்ட தொழில் திணைக்கள தலைவருக்கு 4 வருட சிறை தண்டனை
யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றில் 100, 000 இலவசமாக அதிபர் கோரி 50,000 இணை பெற்றுக் கொண்டமை தொடர்பில் கைது (2019.09.20)
இலங்கையில் ஊழலற்ற கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் தகவல் உரிமைச் சட்டத்தின் பங்களிப்பு
1. பொறுப்பு கூறல் மற்றும் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல்:
இவ் தகவல் உரிமை சட்டமானது குறிப்பாக ஒரு விடயம் தொடர்பில் மக்கள் கேட்கும் விடயங்களை கொடுக்க வழி செய்தது. ஊழல் மிகுந்த ஒரு அரசியல்வாதி அல்லது பொது நிறுவனங்கள் இதுவரை ஏமாற்றி இருந்த விடயங்களை அறியவும் அவை தொடர்பில் பொறுப்பு கூறும் தன்மையையும் இவ் தகவல் உரிமை சட்டம் கொண்டு வந்துள்ளது. இச் சட்ட பொறிமுறைகள் மக்களை விழிப்படைய செய்ய உதவியது. அதே போல் இவ்வாறு தவறு செய்வதறகான வாய்ப்பு மிக குறைவாக இருந்தமையால் அதிகாரிகள் ஊழல் செய்ய முன் வரமாட்டார்கள். இதன் மூலமாக ஊழல் அற்ற கலாசாரத்தை உருவாக்குவதில் பங்களிப்பை வழங்கியுள்ளது.
2. உரிமை என்பது என்ன என்பது பற்றி அரசாங்கமும் மக்களும் அறிய வாய்ப்பினை உருவாக்கல்:
இதன் மூலமாக மக்கள் தமது உரிமை என்ன என்பதையும் அவர்கள் அர்ஷியல் வாதிகள் தவிர புரியும்போது அதை தட்டிக் கேட்பார்கள். ஒரு தவறை அரசியல் வாதிகள் புரியும் பொது இது தவறு என்பதை மக்கள் அறிந்து இருக்க வேண்டும். அதன் மூலமாகவே அவர்கள் ஊழல் செய்வதை தடுக்கலாம். அவர்கள் செய்த தவறினை அடையாளம் காணலாம். அந்தவகையில் இவ் தகவல் உரிமை சட்டமானது ஒரு நாட்டு மக்கள் இடையே ஊழல் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதில் பாரிய பங்கினை ஆற்றிய ஒன்றாகும்.
3. பொதுவளங்களில் இடம்பெறும் ஊழல் தொடர்பில் அறிய வாய்ப்பளித்தது:
இது ஒரு ஆட்சியாளன் எவ்வாறு வளங்களை கையாளுகிறார், எவ்வாறு செயற்படுகிறான் என்பதை அறிந்து கொள்ளவும், ஒரு வளம் தொடர்பான விடயத்தை பெறவும் வலி செய்வதுடன், அரசியல் வாதிகள் ஏமாற்றி பணத்தை ஒளித்து வைத்தல், அதிகளவான சொத்தை வைத்தால், அதை ஏழை மக்களுக்கு வழங்காமை என்பவற்றுக்கு இது தீர்வை பெற்று தந்தது. இதனால் அரசியல் ஊழல் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதில் இவ் தகவல் உரிமை சட்டமானது பங்களிப்பு செய்தது எனலாம். உதாரணமாக,
மஹிந்த பால எதிர் ஹிக்கடுவை பிரதேச செயலகம்.
4. ஒரு சர்வாதிகார ஆட்சிமுறை மற்றும் அடக்கு முறையில் இருந்து விடுபடல் மூலமாக ஊழலை குறைத்தது:
ஒரு நாட்டிலே வரும் மக்கள் தலைவர் சர்வாதிகாரமாக செயற்படல் கூடாது. மக்களின் பணத்தை எடுத்தல், கடன் சுமையை கூட்டல், கேள்வி கேட்கும் நபர்களை கொள்ளல் என்பன இடம்பெற வாய்ப்புண்டு. இலங்கையில் கடந்த கால அரசாங்க செயற்பாடுகள் மூலமாக அதிக பணமானது மோசடி செய்யப்பட்டது. இது பாரிய சவாலாக இருந்தது. 2017 க்கு பிறகு இன்று பரவலாக குறைந்து செல்லும் போக்கினை அறியலாம். அந்த வகையில் இன்றைய அரசாங்கம் தனது செலவுகளை அடையாளம் காணவும், மக்கள் படும் துன்பத்தை நீக்கவும் கணக்கு காட்டுதல் இடம்பெற வேண்டும், ஏன் ஜனாதிபதியை கூட இச் சட்டம் மூலம் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பு கொண்டவர். கடந்த வருடம் ரணில் ஊழல் ஆட்சியை ஆய்வு செய்யவே ஆணைக்குழு ஆர்வமாக இருந்தது. இது ஒரு நாட்டிலே ஊழல் அற்ற ஓர் கலாசாரத்தை உருவாக்க வழி செய்தது எனலாம். உதாரணமாக,
ஸ்டின் சரூர் எதிர் ஜனாதிபதி அலுவலகம்.
5. சிவில் சமூகங்களின் வெற்றிகரமான செயற்திட்டங்கள்:
ஒரு நாட்டிலே அபிவிருத்தி மற்றும் வறுமை என்பன அதிகரிப்பு இருக்கிறது என்றால் அங்கு ஊழல் என்பது நிச்சயமாக இருக்கும். இந்த நிலைமையை மாற்ற ஊழல் அகற்றப்பட வேண்டும். அந்த வகையில் இந்த சிவில் சமூகம் ஒரு நாட்டின் நிலைத்த அபிவிருத்தி ஏற்பட காரணம் ஆகிறது. இது இச் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நிகழ்ச்சி திட்டங்கள், பிரச்சாரம் என்பவற்றின் மூலமாக ஒரு ஊழல் அற்ற ஜனநாயகத்தை உருவாக்குவதில் இது பாரிய பங்கினை வழங்குகிறது. இச் சட்டம் மூலம் சிவில் அமைப்புகள் சிறப்புற இயங்க வழியும் உருவாக்கி கொடுப்பதில் பாரிய பங்கு வகிக்கிறது. இதனால் இலங்கையில் ஊழல் தொடர்பிலும் அது தொடர்பான விளக்கங்களை கூறும் போதும் மக்கள் தெளிவு பெறுவதால் ஊழல் இடம்பெறுவதை கண்டுபிடித்து அதற்கான பணியை செய்வதில் சிவில் அமைப்புகள் பங்களிப்பு செய்கின்றன. இதனால் ஊழல் அற்ற சமூதாயம் ஓன்று உருவாகிறது.
6. பொது அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தலும் ஊழலை இழிவளவாக்கலும்:
இவ் ஊழல் தொடர்பில் பொது அதிகாரிகளுக்கு அறிய வைக்கவும் அவர்கள் புரியும் தவறுகளை குறைப்பதன் மூலமும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவூம் பயிற்சி கட்டாயம் வழங்கப்படல் வேண்டும். ஊழல் என்பது ஒருய புற்று நோய் என்பதை போல் எங்கு ஊழல் கூடுதலாக இடம்பெற வாய்ப்பு உள்ளதோ அங்கு இருந்து இதன் செயற்பாட்டை கட்டாயம் செய்ய வேண்டும். இதன் மூலமாக ஊழல் மூலம் அவர்களுக்கு பயத்தை உண்டு பண்ண வாய்ப்பாக அமைந்ததே தகவல் உரிமை சட்டமாகும். இச் சட்டமானது அப்போதுதான் ஊழல் உள்ள இடங்களை கண்டு அறிந்து அவற்றை இல்லாமல் செய்ய வழியை உருவாக்கும். இதனால் ஊழல் அற்ற கலாசாரத்தை உருவாகும்.
7. முறைப்பாடுகளை அதிகரித்தலும் தண்டனையை உருவாக்கலும்:
இதன் மூலமாக ஒரு அதிகாரிக்கு பயத்தை உண்டு பண்ணி நேர்மையாக தனது வேலையை புரிய உதவுகிறது. இலங்கையில் குற்றம் இழைப்போருக்கு 2 வருட தண்டனை, மற்றும் 50, 000 தண்ட பணம் வென்று கூறியமை ஊழலை ஓரளவுக்கு குறைத்துள்ளளது. பொது அதிகாரிகளுக்கு தகவல் உரிமை சட்டம் ஊழல் தொடர்பிலும் அது தொடர்பில் மக்களுக்கு கணக்கு காட்டல் என்பதால் நேர்மையாக செயற்பட அவர்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது. குறிப்பாக,
1. 2017ஆம் ஆண்டு- 37 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் 218க்கும் மேற்பட்ட பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
2. 2018 ஆம் ஆண்டு: 411 வழக்குகளை பதிவூ செய்த்துடன் 350 பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்து இருப்பதுடன் அதில் 81 சட்ட தீர்ப்புக்கள் மாத்திரம் வெளியில் வந்துள்ளது.
இதனால் 2019 இல் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஊழல் அற்ற ஓர் கலாசாரத்தை இவ் தகவல் உரிமை சட்டம் உருவாக்கி உள்ளது என்பது பாரிய வெற்றி. இன்னும் இவை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஊழல் குறையும். நாடும் முன்னேறி அபிவிருத்தியை உருவாக்கும்.
8.உள்ளுராட்சி முறைமையில் கணக்கு காதல் மற்றும் வெளிப்படை தன்மையை உருவாக்கியமை:
இது பிரதேச ரீதியில் ஊழல் இல்லாத இடமாக மாற்ற உதவியாக இருந்தது. இதுவரை காலமும் பிரதேச சபையில் இருந்த யாரும் கணக்கு காட்டுவதில்லை. தனது சொந்த செலவுக்கு எனவும், அதிக ஊழல் இடம்பெற்ற இடமாக இவை உள்ளுராட்சி நிறுவனங்கள் உள்ளது. குறிப்பாக பிரதேச சபை மூலமே அதிக ஊழல் இடம்பெறுவதாக சொல்லப்படுகிறது. இவ் ஊழல் ஆனது அதிகமாக நகரினை அலங்கரித்த, பாதை விரிவாக்கம் போன்ற இடங்களில் அதிகமாக உருவாகுவதாகவும் கணக்குப் காட்டுதல் இல்லாத ஒன்றாகவும் இருந்தது. இன்று இவ் தகவல் உரிமை சட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் கணக்கு காட்டும் தன்மை அதிகரித்து வருவதுடன் இது தொடர்பான வழக்குகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது தகவலை பெற மக்களுக்கு உள்ள உரிமை தொடர்பில் ஊழல் முற்றாக ஒழிய இது வழிவகுத்துள்ளது.
9. சொத்து குவிப்பு பற்றியும் வருமான வரி தொடர்பிலும் ஊழல் தன்மையை ஒழித்தல்:
இன்று பெரும்பாலும் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதியின் நோக்கம் பணம் என்பதே. பணத்தை பெறுவதன் மூலமாக பெருமளவு சொத்து இதுவரை குவித்து வந்த அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பாரிய சிக்கலாக மாறியதால் தகவல் உரிமை சட்டத்தை மீறி எதையும் செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கியது எனலாம். இதனால் இதுவரை காலமும் மறைத்த சொத்துக்கள் தொடர்பில் வெளிப்படை தன்மையை உருவாக்க இச் சட்டம் காரணமாக அமைந்ததால் ஊழல் அற்ற ஓர் கலாசாரத்தை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பினை வழங்கியது. கடந்த காலத்தில் ரணில் செய்த மத்திய வங்கி ஊழல், மற்றும் இந்தியாவில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா போன்ற ஆட்சியாளர்கள் இவ் தகவல் உரிமை சட்டம் மூலமாகவே வழக்குகளை உருவாக்கினர்.
10. ஊழியர்களின் நலன் பேணல்:
இதுவரை காலமும் ஊழியர் நலன்கள் பேணாது குறைந்த சம்பளம், திடீர் வேலை நிறுத்தம், அவ்வாறு வேலை நிறுத்தம் செய்தல் மூலம் எதனையும் திருப்பி பெற முடியாத நிலை என்பன காரணமாக பதவி துஸ்பிரயோகம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்பன இடம்பெற்றன. இது தொடர்பில் பல மரணம் கூட நாட்டில் இடம்பெற்றுள்ளன. அனால் இன்று இந்த தகவல் உரிமை சட்டம் மூலமாக எல்லா ஊழியர்களும் குறிப்பாக இளைஞர்கள் எதிர்நோக்கிய சகல பிரச்சனைக்கும் இது தீர்வாக அமைந்திருந்தமை நன்மையே. இதனால் ஒரு சாதாரண ஊழியனது உரிமையை பெற்றுக் கொடுக்க உதவியது. அத்துடன் இது ஊழல் அற்ற ஒரு கலாசாரத்தை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளது.
11. ஆட்சேர்ப்பு விடயத்தில் ஊழல் மற்றும் வெளிப்படை தன்மை இன்மை.
கடந்த காலங்களில் ஊழல் அதிகமாக காணப்பட்டது இந்த துறையில்தான். இன்றும் இது உள்ளது. இன்று தனியார் நிறுவனம் என்றாலோ அரச நிறுவனம் என்றாலோ மோசடி செய்வது அதிகமாக உள்ளது. ஒரு பாடசாலையில் கூட மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் பாரிய நிதி மோசடி செய்யப்படுகிறது. படிக்காத இது பற்றி அறியாத ஓர் சமூதாயத்தில் தனது பிள்ளைக்காக உழைக்கும் சமூதாயத்தில் பணம் பறிக்கப்பட்டது. இதனை எல்லாம் மாற்றி அமைத்த பெருமை தகவல் உரிமை சட்டத்தையே சாரும். இன்று இந்த தகவல் உரிமை சட்டம் மூலமாக பாடசாலையில் சாதாரண நிதி கூட வாங்காத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது தகவல் உரிமை சட்டம். இதனால் நாட்டினுள் குறிப்பாக கல்வியில் இலஞ்சம் என்ற தன்மையை உருவாக்கி ஊழல் அற்ற கலாசாரத்துக்கு வழிவகுத்தது எனலாம்.
தகவல் உரிமைச் சட்டத்திற்கு இலங்கையில் இல்லாத போது ஊழலுக்கு பங்களித்த காரணிகள்
1. வெளிப்படை இன்மை மற்றும் இரகசிய தன்மை
2. பொது அலுவலகங்களில் கோப்புகளை ரகசியமாக வைத்திருந்தமை
3. பொறுப்பு கூறல் இன்மை
4. எந்தவொரு சட்டமோ அல்லது மகாநாடு இன்மை
5. பொது அதிகாரிகளின் பெயரில் அதிக சொத்தும் பணமும் காணப்படல்
6. வருமான வரி கட்டப்படுவதில்லை
7. கணக்கு காட்ட கோரியவர்கள் கடத்தப்படல் அல்லது கொல்லப்படல்
இன்று தகவல் உரிமை சட்டமானது வந்தபின் ஊழல் சுட்டியில் இலங்கை 40 புள்ளியில் இருந்து 40 புள்ளியில் இருந்து 38ஆக குறைந்துள்ளது. 2012-2019 வரையிலான "Transparency International" கடந்த 7 ஆண்டுகளின் தரவின் படி தொடர்சியாக இது 89ஆவது இடத்தில இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளனர். 2017இன் பின்பு படி தகவல் உரிமைச் சட்டமானது ஊழல் அற்ற கலாசாரத்தை உருவாக்குவதில் ஒருவகையில் பங்களிப்பு செய்துள்ளது.
வருடம் இடம்
2016 95
2017 91
2018 89
2019 93
தகவல்: "Transparency International"
இதனை பின்வரும் வரைவின் ஊடாக காணலாம்.
ஊழல் அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் வழிகள் :
1. ஊழலை எதிர்க்கும் நிறுவனங்கள் தரும் ஆதரவை அதிகரித்தல்
2. தகவல் உரிமை தொடர்பான வேறு புதிய சட்ட அணுகுமுறையை பின்பற்றல்
3. தகவல் பெறும் உரிமை தொடர்பில் அதிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
4. சட்டத்தை பயன்படுத்துவோரின் அளவை அதிகரித்தல்.
5. அதிக வளத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சர்வதேச முறைப்பாடுகளை உருவாக்கல்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஊழல் அற்ற ஓர் கலாசாரத்தை உருவாக்கும் வாய்ப்பினை அதிகரிக்கலாம்.
இன்று இவ் தகவல் உரிமை சட்டத்தின் திறன் மற்றும் அதன் வகிபங்கு என்ற அடிப்படையில் இலங்கை 4வது இடத்திலும் 131 புள்ளிகளை பெற்றுக் காணப்படுகிறது. அதன் வெற்றிகரமான தன்மையை காட்டுகிறது. இலங்கையில் தகவல் உரிமைச் சட்டமானது ஓர் உறுதி தன்மை கொண்டு காணப்படுவதால் ஊழல் குறைந்து வருவதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது. இது இதுவரை காலமும் இளைஞர்களுக்கு பாரிய பிரச்சனையாக இருந்ததுடன் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும் இளைஞர்கள் அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டின.
முடிவுரை
தகவல் உரிமை சட்டமானது ஜனநாயகத்தை பேணவும், கேள்விகளை கேட்கவும், பதில்களை கோரவும், உங்கள் கருத்தை தெரிவிக்கவும், மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது. இது உலகின் அன்றாட பங்கேற்பிக்கான முதற்படியாகும். இந்த மூன்று ஆண்டுகளில் நமது சட்டவாட்சியைக் பேணியும் ஊழல் அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க வாய்ப்பளித்து உதவியது. ஒரு நாட்டிலே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அதிகாரத்துவத்தால் பொறுப்பு கோர வேண்டும். தகவல் உரிமை ஒரு நிபந்தனை அல்ல. ஆனால் அவசியமான ஒன்று. இது அதிகாரத்தின் ஏற்ற தாழ்வுகளை அகற்றுவற்கான போராகும். ஒரு வன்முறை அற்ற மாற்றத்தின் வழியே. எனவே தகவல் உரிமை சட்டமானது இலங்கையில் ஊழல் அற்ற ஓர் கலாசாரத்தை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளது எனலாம்.







தேவையான பதிவு.
ReplyDelete